அமெரிக்கா: கரண்ட் இல்லாமல் தவித்த 16 ஆயிரம் பேர்.. யார் செஞ்ச வேலை.. அடப்பாவி நீயா.?

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
அமெரிக்காவின் ஆஸ்டின் பகுதியில் 16 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். பரபரப்பான பகுதி என்பதால் இங்கு மின்சாரம் என்பது மிகுந்த அவசியமாக கருதப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 16ம் தேதி இரவு 1 மணிக்கு திடீரென கரண்ட் கட்டானது. எப்போதும் இல்லாத வகையில், தூங்கும் வேளையில் திடீரென மின்சாரம் தடை பட்டதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளானர்.

மின் தடை பொதுமக்கள் சம்மபந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினர். அதைத் தொடர்ந்து மின் தடை குறித்து ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாம்பு ஒன்று ஆஸ்டின் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்திற்குள் நுழைந்ததால் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து ஆஸ்டின் ஆற்றல் துறை அதிகாரி மாட் மிட்செல் கூறும்போது, ‘‘துணை மின் நிலையத்தில் பாம்பு நுழைந்து, மின்சார சர்க்யூட்களில் ஊர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தியதால் 16 ஆயிரம் பேருக்கு மின் தடை ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, நள்ளிரவு 2 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இந்த அதிகாரிகளின் செயல்பாடுகளாலோ, உள்கட்டமைப்பு வசதி இன்மையால் இந்த மின் தடை ஏற்படவில்லை.

ஒரு பாம்பின் செயலால் 16 ஆயிரம் பேர் சிரமத்திற்குள்ளாகியுள்ளது வருத்ததிற்குரியது. இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, மின் நிலையங்கள் முன்பு குறைந்த வோல்டேஜ் கொண்ட பாம்பு பிடி கூண்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மின் தடை என்பது சாதராண விசயமல்ல, அதுவும் நள்ளிரவில் தூக்கத்தை கெடுத்துள்ளது. அந்த பாம்பானது பல்வேறு சர்க்யூட்களில் நுழைந்ததால் இனியும் பல்வேறு வேலைகள் செய்யப்பட வேண்டியுள்ளது’’ என மிட்செல் தெரிவித்துள்ளார்.

அரசு வளர்ச்சியில் AI.. தற்போது இருக்கும் 80% வேலைகள் எதிர்காலத்தில் இருக்காது.. நிபுணர் எச்சரிக்கை!

இதே போன்றதொரு நிகழ்வு கடந்த ஜப்பானிலும் நிகழ்ந்துள்ளது. ஒரு பாம்பு ஒன்று மின்நிலையத்தில் புகுந்து எலக்ட்ரிக் வயரை சிக்கியதால் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் பாம்பை கண்டெடுத்தபோது வரை, உயிரிழந்த நிலையிலும் பாம்பானது எரிந்த வண்ணமே இருந்துள்ளது. மேலும் புகை எழும்பியதால் 6 தீயணைப்பு வண்டிகள் இயக்கப்பட்டதும் குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.