Level 1 ADAS நுட்பத்தை பெற்ற மாடலாக வெளிவந்துள்ள 2023 வோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி காரில் புதிய RDE விதிமுறைகளுக்கு ஏற்ற மேம்பட்ட என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.49,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
BS6 phase 2 இணக்கமான 2.0-லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் ஆனது 190hp மற்றும் 320Nm டார்க் வழங்குகின்றது. 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழியாக நான்கு சக்கரங்களுக்கும் ஆற்றலை வழங்குகிறது. மைலேஜ் 12.65kpl-லிருந்து 13.54kpl ஆக ARAI- சான்றளிக்கப்பட்டுள்ளது.
2023 Volkswagen Tiguan
பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றுள்ள ஃபோக்ஸ்வேகன் டிகுவானில் சாம்பல் மற்றும் வெள்ளை நிற உட்புறத்தைப் பெறுகிறது. அனைத்து இருக்கைகளுக்கும் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் மற்றும் சீட்-பெல்ட் நினைவூட்டல் மற்ற பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில்-டிசென்ட் கண்ட்ரோல் மற்றும் மூன்று-புள்ளி இருக்கை பெல்ட் மற்றும் அனைத்து இருக்கைகளுக்கும் சரிசெய்யக்கூடிய ஹெட் ரெஸ்ட் ஆகியவை அடங்கும்.
டிகுவான் காரில் ஃபோக்ஸ்வேகனின் பார்க் அசிஸ்ட் சிஸ்டத்தையும் பெறுகிறது. சுவாரஸ்யமாக, கார் ஸ்டியரிங் தானாக செயல்பட்டாலும், ஆக்சிலேரேட்டர் மற்றும் பிரேக்கு டிரைவர் கட்டுப்பாட்டில் உள்ளதால் செமி ஆட்டோமேட்டிக் பார்க்கிங் அமைப்பாகும்.
ஹூண்டாய் டூஸான், சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் மற்றும் ஜீப் காம்பஸ் உட்பட ஸ்கோடா கோடியாக் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.