வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ,-அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட 500 அமெரிக்கர்களுக்கு ரஷ்யா தடை விதித்து உள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே ஒராண்டுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதையடுத்து, ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துஉள்ளது.
குறிப்பாக, நுாற்றுக்கணக்கான ரஷ்யர்கள் மற்றும் ரஷ்ய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது; இது, ரஷ்யாவுக்கு பொருளாதார ரீதியாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, அமெரிக்காவுக்கு பதிலடி தரும் நடவடிக்கைகளில் ரஷ்யா இறங்கியுள்ளது. இது குறித்து, ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, முன்னாள் அமெரிக்க துாதர் ஜான் ஹன்ட்மேன், ‘டிவி’ நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மேல் மற்றும் அமெரிக்க எம்.பி.,க்கள் உள்ளிட்ட, 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.
ரஷ்யாவுக்கு எதிரான எந்த ஒரு தாக்குதலுக்கும் சரியான பதிலடி கொடுக்கப்படும் என்பதை, நீண்ட காலத்துக்கு முன்பே அமெரிக்கா தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement