ஒரு குடும்ப கட்சி, அதிமுகவுக்கும், திமுகவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்ற பேச்சுடன் அரசியலுக்கு வந்த
ஹாசன் தொடக்கத்தில் இருந்தே காங்கிரசுடன் நட்புறவில் நீடித்து வருகிறார். அண்மையில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த கமல் அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலும் காங்கிரசுடன் சேர்ந்து பயணிக்க அதிக வாய்ப்புள்ளது.
ஆனால்,
கட்சி திமுகவுடன் அங்கம் வகிப்பதால் ஏதோ ஒரு வழியில் திமுகவுக்கு
பங்களிப்பை கொடுத்து வருகிறார். கமல் கட்சி தொடங்கிய போது டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார். கமலை நோக்கி பெரிய எதிர்பார்ப்பு எழுந்த நேரம் அது. சுதாரித்துக்கொண்ட தமிழக காங்கிரஸ் கமலை கைக்குள் போட்டுக்கொள்ள திட்டமிட்டது. அதன்படியே, தமிழக காங்கிரசுடன் இணங்கி செல்ல போவதாக கமல் அறிவித்தார்.
அதே சமயம் திமுகவுடன் கூட்டணி வைக்க கமல் விரும்பவில்லை எனவும் சொல்லப்பட்டது. குறிப்பாக, திமுகவுடன் இருந்து காங்கிரசை பிரித்து காங்கிரசுடன் தனி கூட்டணி அமைப்பதே கமலின் எண்ணமாக இருந்தது. ஆனால், காங்கிரஸ் திமுகவில் இருந்து வெளியேறுவதாக தெரியவில்லை.
இருப்பினும், காங்கிரசுக்கு தனது ஆதரவை கொடுத்து வருகிறார் கமல்ஹாசன். இது அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலிலும் நீடிக்கும் என தெரிய வருகிறது. அதேசமயம், இன்று கர்நாடக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு அரசியல் ரீதியான அடுத்தகட்ட நகர்வுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் சொல்கிறார்கள்.
மேலும், காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதன் மூலம் மக்கள் நீதி மய்யம் பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரசுடன் இணைந்து பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில், திமுக தலைவர் ஸ்டாலினின் பிறந்த நாள் புகைப்பட கண்காட்சியை கமல்ஹாசன் திறந்து வைத்திருந்தார். இதனால் கமலுக்கு காங்கிரசை கடந்து திமுகவுடன் நெருக்கம் அதிகமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் வெளிப்படையாக இருக்காமல் காங்கிரஸ் மூலமாக திமுகவுடன் இணக்கம் காட்டி வருகிறார் கமல்.