வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கர்நாடகாவில் காங்கிரசின் அபார வெற்றிக்குப் பின், வரும் 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும் முயற்சி வேகம் எடுத்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணிக்கு காங்., தலைமை தாங்கக் கூடாது என இதுவரை சொல்லி வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இப்போது தன் நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்.
‘கூட்டணிக்கு காங்., தலைமை தாங்கட்டும். ஆனால் காங்கிரசுக்கு எங்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதோ அங்கு மட்டும் போட்டியிட்டு, மற்ற தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்’ என மம்தா நிபந்தனை போட்டுள்ளாராம்.
இதற்காக அவர் ஒரு லிஸ்டும் தயாரித்துள்ளாராம். இந்த பட்டியல்படி பா.ஜ.,வும், காங்கிரசும் 100 தொகுதிகளில் நேரடியாக மோதிக் கொள்கின்றன. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடட்டும் என்கிறாராம் மம்தா.
இது பற்றி பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளாராம் மம்தா.
மம்தாவின் நிபந்தனைப்படி மேற்கு வங்கத்தில் காங்., போட்டியிடக் கூடாது; திரிணமுல் காங்கிரசுக்கு ஆதரவளிக்க வேண்டும். இப்படி நிபந்தனை விதித்தால் எங்கள் கட்சி எப்படி வளரும் என்கின்றனர் காங்., தலைவர்கள்.
இந்த பார்முலா படி தமிழகத்தில் தி.மு.க., தான் பலமான கூட்டணி கட்சி. அப்படியென்றால் 39 தொகுதிகளிலும் தி.மு.க., தான் போட்டியிடுமா என காங்., தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மம்தாவின் இந்த பார்முலாவை ராகுல் நிராகரித்துவிட்டதாக புதுடில்லி அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement