Today Headlines 21 May 2023: இன்றைய தலைப்பு செய்திகள்… திமுக உயர்நிலை கூட்டம் முதல் ஐபிஎல் பிளே ஆஃப் வரை!

தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் இன்று காலை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.தமிழ்நாடு மின்சார வாரியம் பெரிதும் வளர்ச்சி கண்டுள்ளது. உபரியாக உள்ள மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு வழங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளோம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பிரதமரின் ஜப்பான் பயணம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 46வது கோடை விழா இன்று தொடங்குகிறது. மொத்தம் 8 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு, அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை கீழ்ப்பாக்கம் அருகே பைக்கில் அதிவேகமாக சென்ற இளைஞர், சாலையில் படுத்திருந்த மாட்டின் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இதுபற்றி போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈபிஎஸ் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பலர் கலந்து கொள்ளவில்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டியளித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா

கர்நாடகா மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட காங்கிரஸ் ஆட்சி தனது முதல் அமைச்சரவை கூட்டத்தில் 5 தேர்தல் வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் வரும் ஜூன் ஒன்றாம் தேதி அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மணிப்பூர் மாநிலத்தில் ஷிரூய் நகர் அருகே லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 2ஆக பதிவாகியிருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.கருப்புப் பணத்தை ஒழிக்கவே 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுகிறது என்று முன்னாள் முதன்மை செயலாளர் ரிபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

உலகம்

ஜப்பானில் நடந்து வரும் ஜி7 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, எங்கெல்லாம் உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறதோ, அங்கெல்லாம் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.சீனாவில் சாட் ஜிபிடி-ஐ பயன்படுத்தி ரயில் விபத்து என தவறான செய்தியை பரப்பிய ஹாங் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளது.உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்கினால் பெரும் ஆபத்துகளை சந்திக்க நேரிடும் என்று மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வர்த்தகம்

கடந்த ஓராண்டாக (365 நாட்கள்) பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் விலை 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விளையாட்டு

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு 3வது அணியாக லக்னோ முன்னேறியுள்ளது. ஏற்கனவே குஜராத், சென்னை ஆகிய அணிகள் முன்னேற்றம் அடைந்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.