ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், 200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் 6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான்.
பள்ளி விடுமுறைக்காக போஜ்புரா கிராமத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற அந்த சிறுவன், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான்.சம்பவ இடத்திற்கு விரைந்த மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 100 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனை இரும்பு வலையின் உதவியுடன் வெளியே எடுத்தனர். பின்னர் மீட்கப்பட்ட சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.