இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் தமன்னா ஒரு அருமையான டான்ஸர். அவர் டான்ஸ் ஆடினால் ரசிகர்கள் வைத்த கண் வாங்காமல் பார்ப்பார்கள். இந்நிலையில் அனில் ரவிபுடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் என்.பி.கே. 108 படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுமாறு தமன்னாவிடம் கேட்டார்கள் என்றும், அதற்கு அவர் ரூ. 5 கோடி கொடுத்தால் ஆடுகிறேன் என கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.
என்னோடு Best Friend ஜி.வி
இது குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார் தமன்னார். ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது,
அனில் ரவிபுடி சாருடன் சேர்ந்து வேலை பார்ப்பது எனக்கு பிடித்திருக்கிறது. அவர் மீதும், பாலகிருஷ்ணா சார் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அதனால் என்னை பற்றிய ஆதாரமற்ற இந்த செய்திகளை படிப்பதும், அவர்கள் படத்தில் ஒரு பாடலுக்கு நான் ஆடுவதாக கூறுவதும் கவலை அளிக்கிறது. இது போன்று எழுதுவதற்கு முன்பு தயவு செய்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் என்றார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
பாலகிருஷ்ணா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுமாறு அனில் ரவிபுடி கேட்டதாகவும், ரூ. 5 கோடி கொடுக்கிறீர்களா என தமன்னா கேட்டதை கேட்டு அனில் அதிருப்தி அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
அனில் ரவிபுடி, தமன்னா கூட்டணி வெற்றி கூட்டணி ஆகும். அனில் ரவிபுடி இயக்கிய எஃப்2, எஃப்3 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் தமன்னா. முன்னதாக சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் Sarileru Neekevvaru படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருந்தார் தமன்னா என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மை காலமாக தமன்னாவின் காதல் வாழ்க்கை பற்றி அதிகம் பேசப்படுகிறது. அவரும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் இருவரும் இதுவரை காதலை உறுதி செய்யவில்லை.
விஜய் வர்மா மட்டும் அவ்வப்போது ஏதாவது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட அதை பார்ப்பவர்கள் இது தமன்னாவை பற்றியது தான் என்கிறார்கள். விஜய் வர்மாவும், தமன்னாவும் நிச்சயமாக காதலிக்கிறார்கள் என்கிறார்கள் ரசிகர்கள்.
Ajith: சூரிக்கு அஜித் கொடுத்த சூப்பர் அட்வைஸ்: உங்களுக்கும் பொருந்தும் பாஸ்
பிரான்ஸ் நாட்டில் நடந்து வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார் தமன்னா. மேலும் விஜய் வர்மாவும் கேன்ஸ் திரைப்படவிழாவில் பங்கேற்றார்.
கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட பிறகு போலா ஷங்கர் படப்பிடிப்பில் பங்கேற்க சுவிட்சர்லாந்துக்கு சென்றுவிட்டார் தமன்னா. தமன்னாவுடன் கீர்த்தி சுரேஷும் நடிக்கும் போலா ஷங்கர் படத்தை மெஹர் ரமேஷ் இயக்கி வருகிறார்.
படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். திலீப்பின் படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார் தமன்னா.
மேலும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தமன்னா. அந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. ஜெயிலர் படத்தை ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள்.
Rajinikanth: மிரள வைத்த ரஜினி: ஐஸ்வர்யாவிடம் மன்னிப்பு கேட்கும் தலைவர் ரசிகர்கள்
ரஜினிகாந்த் படத்தில் தமன்னா நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். அவர் படங்கள் தவிர்த்து வெப்தொடர்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.