முதல் முறையாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேயிலை கண்காட்சி..!!

நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக பொதுமக்களுக்கு தெளிவு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நேற்று தேயிலை கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியை தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் குத்து விளக்கேற்றி,காட்சி அரங்குகளை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

இந்நிலையில், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மாவட்ட நிர்வாகம், தேயிலை வாரியம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து நேற்றும் இன்றும் ஆகிய இரு நாட்கள் தேயிலை கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டது.

அதோடு, இந்த இரண்டு நாட்கள் நடைபெறும் தேயிலை கண்காட்சியில் நாம் அன்றாடம் பருகக்கூடிய தேயிலைத் தூளின் பல்வேறுபட்ட வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, அதன் சுவை அறியும் திறனும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்படும்; மற்றும் விற்பனைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கண்காட்சியில் சிறு மற்றும் குரு தேயிலை விவசாயிகளின் சிறப்பு தேயிலையும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்த கண்காட்சியில் சுமார் 30 மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு கலப்படம் இல்லாத தேயிலைத் தோள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் அகில உலக தேயிலை தினத்தை ஒட்டி இண்ட்கோசர்வ் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே தேயிலை உற்பத்தி மற்றும் கலப்படமில்லாத தேயிலை தூள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கட்டப்பட்டு தேயிலை தொழிற்சாலையை நேரில் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக, தேயிலை தூள் தயாரிக்கும் இயந்திரங்களை காட்சிப்படுத்தி எவ்வாறு தேயிலையில் இருந்து தேயிலை தூள் தயாரிக்கப்படுகிறது என்பதனை விளக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.