மத்திய அரசு ஊழியர்களுக்கு இலவச அறிவிப்பு… AIIMS சிகிச்சைக்கு செல்பவர்கள் செம ஹேப்பி!

மத்திய அரசின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு CGHS எனப்படும் மத்திய அரசு சுகாதார திட்டத்தின் கீழ் பல்வேறு சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதாவது, சாதாரண நோய்கள் முதல் தீவிர பாதிப்புகள் வரை, அறுவை சிகிச்சை முதல் நீண்ட கால சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு கட்டணமில்லா சேவை அளிக்கப்படுகிறது. இதனை குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டும் பெற்றுக் கொள்ள முடியும்.

மத்திய அரசு அறிவிப்பு

இதற்கான கட்டணத்தை முதலில் நாம் மருத்துவமனையில் செலுத்திவிட வேண்டும். அதன்பிறகு மத்திய அரசின் சுகாதார திட்டத்தில் விண்ணப்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இதில் கால தாமதம் ஏற்படுவதால் ஊழியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சையை பெற்று கொள்ள மத்திய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை

இதுதொடர்பான ஒப்பந்தம் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் முன்னிலையில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இடையில் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, போபால், புவனேஸ்வர், பாட்னா, ஜோத்பூர், ராய்ப்பூர், ரிஷிகேஷ் ஆகிய 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் மத்திய அரசு ஊழியர்கள்…

கட்டணம் தேவையில்லை

மூன்று விதமான சிகிச்சைகளை கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இந்த சலுகை ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. நேர விரயம் ஏற்படாது. ஆவணங்களுக்காக அலைய வேண்டியது இல்லை. பணத்திற்காக பிறர் கையை எதிர்பார்த்து நிற்க வேண்டாம். இத்தகைய அறிவிப்பால் மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஒட்டுமொத்தமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக எய்ம்ஸ் கட்டணமில்லா சிகிச்சை திட்டம் இருக்கும் எனக் கூறுகின்றனர். மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மட்டுமின்றி, அவர்களை சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்.பி.,க்கள் உள்ளிட்டோருக்கும் விரிவான சுகாதார பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த சேவை படிப்படியாக மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.