#BIG NEWS : நாளை முதல் பொதுமக்கள் செலுத்தும் வரிகள் ஆன்லைன் மூலம் பெறப்பட வேண்டும் – தமிழக அரசு உத்தரவு..!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கிராம ஊராட்சிகளில் நாளை முதல் ஆன்லைன் மூலமாக வரி செலுத்தும் முறை அமலுக்கு வருகிறது. அதன்படி, வீடு, சொத்து, குடிநீர், தொழில் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் ஆன்லைனில் மட்டுமே பெற உத்தரவிடப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் புதிய கட்டடத்திற்கான அனுமதி நாளை முதல் இணையதளம் மூலம் வழங்கப்படும்.

புதிய கட்டடங்களுக்கு அனுமதி பெற onlineppa.tn.gov.in என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஊரகப் பகுதிகளில் புதிய கட்டடங்களுக்கான அனுமதி வழங்க கிராம ஊராட்சி செயலாளருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சியில் எந்தவொரு சேவைக்கும் கட்டணத்தை இணையம் மூலமே பெற வேண்டும்.

கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரிகளை tnrd.tn.gov.in என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று செலுத்தலாம். அதேபோல், புதிய கட்டடங்களுக்கு அனுமதிப் பெற onlineppa.tn.gov.in என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட இணையதளம் நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளது. கிராம ஊராட்சிகள் பொதுமக்களிடம் இருந்து எந்த ஒரு பணத்தையும் ரொக்கமாக பெறக்கூடாது. ஆன்லைன் மூலமாக மட்டுமே பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.