சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த சன்ரைசர்ஸ்
ஐபிஎல்-லின் 69வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதல் பேட்டிங்கில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை குவித்தது.
சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக விவ்ராந்த் சர்மா 69 ஓட்டங்களையும், மயங்க் அகர்வால் 83 ஓட்டங்களையும் குவித்து இருந்தனர்.
வெற்றியை பதிவு செய்த மும்பை
201 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 56 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
மேலும் மும்பை அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முக்கியமான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கிய கேமரூன் க்ரீன் 47 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் என விளாசி 100 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
Maiden T20 century for Cameron Green! 💯#IPL2023 #MIvsSRH pic.twitter.com/BlBXK2c40O
— OneCricket (@OneCricketApp) May 21, 2023
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் 201 ஓட்டங்களை குவித்தது.
அத்துடன் சன்ரைசர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே மூன்று அணிகள் முன்னேறி விட்ட நிலையில் நான்காவது இடத்திற்கு மும்பை அணி தேர்வு பெறுவதற்கான அதிகமான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
அடுத்து நடைபெற்ற இருக்கும் பெங்களுரூ மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவை பொறுத்து நான்காவது அணியின் பிளே ஆப்பிற்கு தேர்வு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.