அடப்பாவிகளா.. பலாத்காரம் செய்ய வந்தவனை கொலை செய்த பெண்.. 6 ஆண்டு சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்

மெக்சிகோ சிட்டி:
தன்னை பலாத்காரம் செய்ய வந்த நபரை கொலை செய்த பெண்ணுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.13 லட்சம் அபராதமும் விதித்து மெக்சிகோ நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
மெக்சிகோ நாட்டில் உள்ள நகல்கோயொல்ட் நகரைச் சேர்ந்தவர் ரொக்ஸ்னா ரூயிஸ். 23 வயது ஆகிறது. இவருக்கு திருமணமாகி விவகாரத்து ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இவருக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். அப்பகுதியில் உள்ள ரெஸ்டாரண்ட்டில் வேலை பார்த்து வந்த ரோக்ஸ்னா, அதிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார்.

இதனிடையே, கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் ஒரு நாள், ரூயிஸ் தனது வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அந்த உணவகத்துக்கு அடிக்கடி வந்து செல்லும் ஒரு வாடிக்கையாளர் அங்கு வந்தார். இருவரும் பேசிக்கொண்ட சென்றனர். அப்போது இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால், வீட்டிற்கு செல்ல சிரமம் ஏற்படும் என அந்த நபர் கூறியிருக்கிறார். இதையடுத்து, ரோக்ஸ்னா ரூயிஸ் அவரிடம் தனது வீட்டிலேயே தங்கிக்கொள்ளும்படி கூறியிருக்கிறார்.

அன்றைய தினம் இரவு, ரூயிஸ் தனது அறையிலும், அந்த நபர் மற்றொரு அறையிலும் படுத்துள்ளனர். இந்நிலையில், நடு இரவில் திடீரென அந்த நபர் ரூயிஸின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த ரூயிஸ், தன்னை தற்காத்துக் கொள்வதற்காக அருகில் இருந்து இரும்பு ராடை எடுத்து அந்த நபரை தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அந்த நபர் அங்கேயே விழுந்து உயிரிழந்தார்.

அதிர்ச்சி.. ரிசார்ட்டில் தங்கிய காதலர்கள்.. இரவில் இருவருக்கும் நடுவே படுத்திருந்த உருவம்.. உஷார்

இதை பார்தது பயந்து போன ரூயிஸ், அந்த நபரின் உடலை மூட்டைக் கட்டி சாலையில் வீசியுள்ளார். அப்போது அங்கிருந்த போலீஸார் ரூயிஸை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த மெக்சிகோ சிட்டி நீதிமன்றம், ரூயிஸுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்துக்கு 16000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.13 லட்சம்) கொடுக்கும்படியும் தீர்ப்பளித்து.

இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக மெக்சிகோ முழுவதும் கடந்த சில தினங்களாக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. தன்னை பலாத்காரம் செய்தவனை தற்காப்புக்காக ஒரு பெண் கொலை செய்தது எப்படி குற்றம் ஆகும்? என போராட்டக்காரர்கள் கேள்வியெழுப்பினர். நாளுக்கு நாள் இந்தப் போராட்டம் தீவிரமடைந்து வந்தது. இந்த சூழலில், போராட்டங்களுக்கு பணிந்த நீதிமன்றம், ரூயிஸுக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும், அபராதத்தையும் திரும்பப்பெறுவதாக இன்று அறிவித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.