பெங்களூருவில் கனமழை காரணமாக இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக பெங்களூருவில் பெரும்பாலான பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் ஆலங்கட்டி மழை உடன் கனமழை பெய்தது. பலத்த காற்றும் வீசியதில், மரங்கள் வேரோடு சாய்ந்தன.
மழை நீர் வடிவதற்கு வழியின்றி சாலை முழுவதும் வெள்ளநீர் தேங்கி காணப்பட்டது. அப்போது சுரங்க பாதையில் சிக்கிய காரில் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், பெங்களூருவில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் சித்தராமையா நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் அரசு அதிகாரிகள், காவல் துறையினர் உள்ளிட்டோரும் சென்றனர்.
உயிரிழப்பு பதிவானதை அடுத்து மருத்துவமனைக்கு சென்று உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் அவர்களுக்கு இழப்பீடாக 5 லட்ச ரூபாய் பணம் தர உத்தரவு பிறப்பித்துள்ளார்.
newstm.in