கனடாவில் இந்திய வம்சாவளி பெண்மணிக்கு நேர்ந்த துயரம்: பட்டப்பகலில் கோர சம்பவம்



கனடாவின் பிராம்டன் நகரில் சீக்கிய பெண்மணி ஒருவரை கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் இந்திய வம்சாவளி நபர் மீது முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

கத்தியால் கண்மூடித்தனமாக

பிராம்டன் நகரில் Sparrow Park பகுதியில் வெள்ளிக்கிழமை சுமார் 6 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
இதில் 43 வயதான டேவிந்தர் கவுர் என்ற சீக்கிய பெண்மணியை 44 வயதான நவ் நிஷான் சிங் என்பவர் கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

குறித்த தகவலை பீல் பிராந்திய பொலிசார் அறிக்கையின் ஊடாக தெரிவித்துள்ளனர். தகவல் தொடர்பில் சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், நடைபாதையில் குற்றுயிராக காணப்பட்ட பெண்மணியை மீட்டுள்ளனர்.

ஆனால் சம்பவயிடத்திலேயே அவர் மரணமடைந்ததாகவே, பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, சம்பவயிடத்தில் இருந்து சமீப பகுதியில் வைத்தே நிஷான் சிங் பொலிசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்கான காரணம்

இருவரும் அறிமுகமானவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறும் பொலிசார், அவர்களின் உறவு மற்றும் தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் அடுத்தகட்ட விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 700,000 மக்கள் வசிக்கும் பிராம்டன் நகரில் பெரும் எண்ணிக்கையிலான சீக்கிய மக்கள் குடியிருந்து வருவது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.