ஸ்டாலினை பின்பற்றும் சித்தராமையா.. பூக்கள் வேண்டாம் புத்தங்கள் கொடுங்கள்.. திராவிட மாடல் ஆன் தி ஃப்ளோர்.!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தன்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துக்களுக்கு பதிலாக புத்தகங்கள் கொடுங்கள் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

சீறும் சித்தராமையா… அசராத டிகே சிவகுமார்… யாருக்கு CM சீட்?

கடந்த 2021ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தல் திமுக வெற்றி வாகை சூடியது. அதைத் தொடர்ந்து முத்துவேல் கருணாநிதி
ஸ்டாலின்
என முதல்வர் முக ஸ்டாலின் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாக்களில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வருபவர்கள் எல்லாம், பூங்கொத்துக்களை கொடுத்த அவரை வரவேற்றனர். அதையடுத்து எனக்கு பூங்கொத்துக்கள் வேண்டாம் புத்தகங்கள் கொடுங்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இந்தநிலையில் கர்நாடகாவில் கடந்த மே 10ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 113 தொகுதிகளே தேவைப்படும் பட்சத்தில் 135 இடங்களில் காங்கிரஸ் கட்சி வென்றது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தது. தென் மாநிலங்களில் ஆட்சியில் இருந்த ஒரே மாநிலத்தையும் பாஜக இழந்தது.

வேலை இல்லாத் திண்டாட்டம், அரசு டெண்டர் ஒப்பந்தங்களுக்கு 40 சதவிகித கமிசன், ஹிஜாப் விவகாரம், சிலிண்டர், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், சிறுபான்மை மற்றும் தலித் மீதான் வெறுப்பு, மாநிலத்தில் வளர்ச்சி இல்லாதது உள்ளிட்ட காரணிகள் பாஜகவிற்கு எதிராக மக்களை திருப்பின.

அதே சமயத்தில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம், டிப்ளோமா முடித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு மாதம் ரூ.1500, 200 யுனிட் வரை இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளும் அக்கட்சிக்கு கை கொடுத்தன. இந்தநிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து நேற்று முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் மற்றும் 8 எம்எல்ஏக்களும் பதவி ஏற்றனர்.

இந்தநிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கூறியபடியே தன்னை வாழ்த்த வருபவர்கள் பூங்கொத்திற்கு பதிலாக புத்தகங்களை பரிசளியுங்கள் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘‘தனிப்பட்ட ரீதியிலும் பொது சந்திப்பிலும் மரியாதை நிமித்தமாக என்னை சந்திக்க வருபவர்கள் கொடுக்கும் பூக்கள் மற்றும் சால்வைகளை வாங்க மாட்டேன் என முடிவு செய்துள்ளேன். என் மீது அன்பும் மரியாதையும் கொண்டு பரிசளிக்க விரும்பவர்கள் புத்தகங்களை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களின் அன்பு என்னை வழிநடத்தட்டும்’’ என கூறியுள்ளார்.

Siddaramaiah: ரூ.2000 நோட்டுக்கள் செல்லாது என பாஜக அறிவித்தது இதற்காகதான்… சித்தராமையா பொளேர்!

முன்னதாக மகளிர் இலவச பேருந்து, 200 யுனிட் இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் தமிழக அரசு நிறைவேற்றியதை தொடர்ந்து, கர்நாடகாவில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்ததும் குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.