முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள்: உடன்பிறப்புக்களுக்கு டார்கெட் நிர்ணயித்த ஸ்டாலின்.!

தி.மு.க. உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ‘‘2023 ஜூன் 3-ஆம் நாள் அன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் வடசென்னையில் நடைபெறும். ஜூன் – 3 அன்று கிளைக் கழகங்கள் தொடங்கி, அனைத்து அமைப்புகளின் சார்பிலும் தமிழினத் தலைவர் கலைஞரரின் திருவுருவப் படத்தினை வைத்து மலர் தூவி மரியாதை செய்திட வேண்டும்.

ஜூன் 20-ஆம் நாள் திருவாரூரில் எழிலுற அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தினை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைக்கிறார். மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் 2023 ஜூன் 3 தொடங்கி, 2024 சூன் 3 வரை ஓராண்டு காலத்திற்குத் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்திட வேண்டும்.

ஊர்கள்தோறும்

: கலைஞரின் நூற்றாண்டு, திமுக 75-ஆம் ஆண்டை முன்னிட்டு நமது பழைய கொடிக் கம்பங்களைப் புதுப்பிக்க வேண்டும்.

எங்கெங்கும் கலைஞர்: கழக மாவட்டங்கள்தோறும் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி – அனுமதி பெற்று, கலைஞரின் முழு உருவச் சிலை, மார்பளவுச் சிலைகளை அமைக்க வேண்டும்.

கழகமே குடும்பம்: பகுதி/ஒன்றிய/நகர/பேரூர் அளவில் 70 வயதுக்கும் மேலான, அரும்பாடுபட்ட கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்க வேண்டும். அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னோடிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று கௌரவிக்க வேண்டும். மாணவர்கள்-இளைஞர்களுக்கிடையே போட்டிகள் நடத்தி பரிசாக முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய புத்தகங்களை வழங்கிட வேண்டும். ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் கழகக் குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து கல்வி உதவிகளை வழங்கிடலாம்.

என்றென்றும் கலைஞர்: பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களைக் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் கருத்தரங்கம், பொதுக்கூட்டம் போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். கலைஞர் படிப்பகங்கள்: கணினி, இண்டர்நெட் வசதிகளுடன் கூடிய நவீனமான கலைஞர் நூற்றாண்டு படிப்பகங்களைத் தொடங்கிட வேண்டும். சார்பு அணிகள்: அனைத்து அணிகளின் சார்பிலும் ஓராண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் செயல்திட்டத்தினை உருவாக்கி, தலைமைக் கழகத்தின் அனுமதியைப் பெற்று நடத்திட வேண்டும்.’’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.