வருகிறது ஆவின் குடிநீர் பாட்டில்… ஒரு நாளைக்கு ஒரு லட்சம்… மெகா பிளானில் தமிழக அரசு!

தமிழக அரசின் பால்வளத்துறையின் கீழ் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் செயல்பட்டு வருகிறது. இதனை சுருக்கமாக ஆவின் (Aavin) என்று அழைக்கின்றனர். இது விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்து பதப்படுத்தி, அதன்பிறகு குளிரூட்டி விற்பனைக்கு கொண்டு வருகிறது.

ஆவின் பால்

பால் பாக்கெட்கள் சிவப்பு, பச்சை, நீலம் உள்ளிட்ட நிறங்களில் விற்கப்படுகின்றன. ஒவ்வொரு நிறமும் பாலின் பல்வேறு நிலையிலான தரத்தை உணர்த்துகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் கொழுப்பு சத்தின் அளவு மாறுபடும். சமீபத்தில் வைட்டமின் டி சத்து நிறைந்த புதிய பால் பாக்கெட்களை அறிமுகம் செய்வதாக ஆவின் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதுதவிர,

பால் பொருட்கள்

தயிர்வெண்ணைநெய்பால் பவுடர்உலர் பழங்கள் அடங்கிய கலவைகுலோப் ஜாமூன் கலவைலஸ்ஸிபன்னீர்ஐஸ்கிரீம்இனிப்பு வகைகள்

பால்வளத்துறை அமைச்சர் மாற்றம்

எனப் பல்வேறு பொருட்கள் ஆவின் விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஆவின் நிறுவனம் குடிநீர் விற்பனையை தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசு இலக்கு

அதுவும் தினசரி ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்களை விற்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்க உள்ளனர். தண்ணீர் பாட்டில்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளி ஆவினின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 500 மில்லி லிட்டர், ஒரு லிட்டர் என இரண்டு விதமான பாட்டில்களில் அடைத்து குடிநீர் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

எனவே ஒப்பந்தம் கோரும் குடிநீர் ஆலைகள் சட்டப்பூர்வ ஆவணங்கள் உடன் அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம். ஒப்பந்தம் எடுப்பவர்களிடம் போதுமான அளவிற்கு குடிநீர் ஆலைகள் மற்றும் இயந்திரங்கள் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டே இதுதொடர்பான பேச்சு எழுந்தது.

ஆரோ வாட்டர் பிளாண்ட்

ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்களிலும் ஆரோ வாட்டர் பிளாண்ட் இருக்கிறது. எனவே குடிநீர் தயாரிப்பு பணிகள் தொடங்குவது மிகவும் எளிது. விரைவாக அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று அப்போதைய அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்திருந்தார். அதன்பிறகு கிடப்பில் போடப்பட்ட திட்டம் மனோ தங்கராஜ் வந்ததும் புத்துயிர் பெற்றிருப்பதாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.