கீவ்: உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முத்தை கைப்பற்றி உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் முயற்சித்து வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ஓராண்டுக்கு மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.
இந்த சண்டையால் உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் உட்பட பல்வேறு நகரங்கள் உருக்குலைந்து உள்ளன.
இதற்கிடையே, உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முத்தை, ரஷ்யாவைச் சேர்ந்த படைப்பிரிவினர் கைப்பற்றுவதற்காக சில மாதங்களாக தீவிரமாக போராடி வந்தனர். அவர்களை எதிர்த்து, உக்ரைன் படையினரும் கடுமையாக போராடினர்.
சமீபத்தில், பாக்முத் நகரின் பெரும்பாலான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும், விரைவில் இந்நகர் முழுவதையும் கைப்பற்றுவோம் என ரஷ்யா அறிவித்திருந்தது.
இந்நிலையில் பாக்முத் நகரை முழுமையாக கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதற்கு ரஷ்ய அதிபர் புடின், வெற்றி பெற்ற படைக்குழுவினரை பாராட்டினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement