Today Headlines 22 May 2023: இன்றைய தலைப்பு செய்திகள்… தஞ்சாவூர் சயனைடு முதல் திமுகவில் அதிரடி மாற்றம் வரை!

தமிழ்நாடு

அதிமுக அலுவலக கலவரத்தின் போது ஓபிஎஸ் தரப்பு ஆவணங்களை எடுத்து சென்றன. இவை இன்றைய தினம் ஈபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்படுகின்றன. இதுதொடர்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் இன்றைய தினம் பெற்றுக் கொள்கிறார்.தஞ்சாவூரில் மது அருந்தி இருவர் உயிரிழந்த நிலையில், அவர்கள் உடலில் இருந்து சயனைடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.தேனி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் அவிநாசி பகுதியில் 15,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வகாப் மாற்றப்பட்டு முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்த்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.புதுவையில் இருந்து விழுப்புரத்திற்கு சட்டவிரோதமாக மதுபானங்கள் கடத்திய மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 200 மது பாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா

பெங்களூரு கே.ஆர்.சர்க்கிள் பகுதியில் கனமழை காரணமாக சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கியது. அதில் சிக்கிய காரில் இருந்த இளம்பெண் உயிரிழந்தார். 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கூறுகையில், அன்பும், மரியாதையும் பரிசுகளாக வெளிப்படுத்த விரும்பும் நபர்கள் எனக்கு புத்தகங்களாக வழங்கலாம் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டைலில் தெரிவித்துள்ளார்.கர்நாடகா சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் 25ஆம் தேதி நடைபெறுகிறது.குத்துச்சண்டை வீரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தன் மீதான பாலியல் புகார் தொடர்பான உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் என்று பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் தெரிவித்துள்ளார்.ஒடிசாவில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியல் வெளியிடப்பட்டு பெரிதும் கவனம் ஈர்த்துள்ளனர். முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் சொத்து மதிப்பு 65.40 கோடி ரூபாய் ஆகும். இவருக்கு கடன்கள் ஏதும் இல்லை.

வர்த்தகம்

சென்னையில் 366வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விளையாட்டு

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் தகுதி பெற்றுள்ளது. வரும் 24ஆம் தேதி நடைபெறும் பிளே ஆஃப் போட்டியில் லக்னோ அணியுடன் மோதுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.