டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இரண்டு வேரியண்டுகள் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் ST எனப்படுகின்ற 4.56Kwh பேட்டரி, 145Km/Charge கொண்ட மாடல் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
விற்பனையில் கிடைக்கின்ற iQube மற்றும் iQube S என இரண்டு வேரியண்டுகளை போல அதைந்திருந்தாலும் கூடுதல் பேட்டரி பேக் திறன் மற்றும் அதிகப்படியான ரேஞ்சு கவனத்தை பெற முக்கிய காரணமாக உள்ளது.
TVS iQube ST
பிரசத்தி பெற்ற ஏதெர் 450X, ஓலா எலக்ட்ரிக் S1, S1 புரோ, ஹீரோ விடா வி1 மற்றும் பஜாஜ் சேட்டக், வரவிருக்கும் சிம்பிள் ஒன் ஆகியவற்றை எதிர்கொண்டு வருகின்ற ஐக்யூப் மாடலில் தற்பொழுது iqube ஸ்கூட்டரின் பேஸ் வேரியண்ட் மற்றும் S வேரியண்டில் 3.04Kwh பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஈக்கோ மோடில் 100 கிமீ வரம்பை வழங்குகிறது.
நிகழ்நேரத்தில் இரண்டு வேரியண்டுளும் 75 முதல் 80 Km ரேஞ்சு வழங்கும் நிலையில் பவர் மோடில் அதிகபட்சமாக 55-60Km வழங்குகின்றது. இந்த மாடல்களின் டாப் ஸ்பீடு 78Km/hr ஆகும். இந்த இரு மாடல்களிலும் 650 வாட்ஸ் சார்ஜர் கொண்டு 0-80 % சார்ஜ் செய்ய 4 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும்.
புதிதாக எதிர்பார்க்கப்படுகின்ற iQube ST வேரியண்டில் 4.56Kwh பேட்டரி வழங்கப்பட்டு ஈக்கோ மோடில் 145Km/Charge வழங்கும் என குறிப்பிட்டுள்ளது. டாப் ஸ்பீடு 82Km/hr ஆகும். இந்த மாடலிலும் பொதுவாக பவர் 3KW மற்றும் டார்க் 33 Nm ஆகவே உள்ளது.
டாப் எஸ்டி வேரியண்டில் 950 வாட்ஸ் சார்ஜர் வழங்கப்பட்டு 0-80 % சார்ஜ் செய்ய 4 மணி நேரம் 06 நிமிடங்கள் ஆகும். கூடுதலாக 1.5Kw வேகமான சார்ஜர் வழங்கப்பட்டு 0-80 % சார்ஜ் செய்ய 2 மணி நேரம் 30 நிமிடங்கள் போதுமானதாகும்.
பேஸ் வேரியண்டில் 5-இன்ச் TFT திரையைப் பெறுகிறது. iQube S வேரியண்டில் 7-இன்ச் TFT திரையைப் பெற்று நான்கு வண்ணங்களில் வருகிறது. இந்த அம்சங்களின் அடிப்படையில், iQube ST ஆனது இருக்கைக்கு கீழே இரண்டு ஹெல்மெட் சேமிப்பு, நான்கு புதிய வண்ணங்கள் மற்றும் வேகமாக சார்ஜ் செய்யும் திறன் ஆகியவற்றைப் பெறும் அம்சம் ஆகியவற்றை பெற்றுள்ளது.
தற்பொழுது விற்பனையில் கிடைத்து வருகின்ற டிவிஎஸ் IQube தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியல்
டிவிஎஸ் IQube – ₹ 1,23,382
டிவிஎஸ் IQube S – ₹ 1,32,822
புதிதாக வரவிருக்கும் டிவிஎஸ் IQube ST ஆன்-ரோடு விலை ₹ 1.55 லட்சத்துக்குள் அமையலாம். அடுத்த சில மாதங்களுக்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் படிக்க – ₹ 30,000 வரை எலக்ட்ரிக் டூ வீலர் விலை அதிகரிப்பு