Trukkural in the language of Dok Pisin: PM Modi released in Papua New Guinea | “டோக் பிசின் மொழியில் திருக்குறள்”: பப்புவா நியூகினியாவில் வெளியிட்ட பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

போர்ட் மோரெஸ்பி: பப்புவா நியூ கினியா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி ‛டோக் பிசின்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார்.

latest tamil news

பிரதமர் மோடி, தன் ஜப்பான் பயணத்தை முடித்து விட்டு, நேற்று இரவு பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியா சென்றடைந்தார். . அந்த நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மாரோப், பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கி வரவேற்றார். பப்புவா நியூ கினியாவில் ‛டோக் பிசின்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார்.

இது குறித்து, பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில் தமிழில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பப்புவா நியூ கினியாவில், டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பெருமை எனக்கும் பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவிற்கும் கிடைத்தது. குறள் ஒரு தலைசிறந்த படைப்பு, இது பல்வேறு துறைகளில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது. சுபா சசிந்திரன், சிறந்த பன்மொழி அறிஞராவார்.

latest tamil news

குறளை டோக் பிசின் மொழியில் மொழி பெயர்க்க எடுத்த முயற்சிக்காக மேற்கு புதிய பிரிட்டன் மாகாண கவர்னர் மற்றும் சுபா சசீந்திரன் ஆகியோரைப் பாராட்டுகிறேன். கவர்னர் சசிந்திரன் தனது பள்ளி படிப்பை தமிழில் கற்று தேர்ந்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.