சொத்து குவிப்பு வழக்கு..மாஜி சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை

புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே மஞ்சக்கரணையில் மருத்துவக்கல்லூரி அமைக்க முறைகேடாக சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் பெயரில் 58 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார் என விஜயபாஸ்கருக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கடந்த ஆண்டு சோதனை நடத்திய நிலையில் இன்றைய தினம் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.

கடந்த 2011, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர் இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்நிலையில் அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சுமார் 60 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றஞ்சாட்டியுள்ளதுடன் அவர் மற்றும் அவரது மனைவியின் மீது எப்ஐஆர் பதிவு செய்யதுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரின் வீடு, அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சோதனை மேற்கொண்டனர்.

Charge sheet filed against vijayabaskar in property case in Pudukottai court

திருவள்ளூர் அருகே மஞ்சக்கரணையில் மருத்துவக்கல்லூரி அமைக்க முறைகேடாக சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். காவல்துறையினர் சோதனை நடத்தி பல மாதங்களுக்குப் பிறகு புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். விஜய பாஸ்கர் மீது 216 பக்கத்திலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.