தமிழகத்தில் கள்ளச்சாராயம், விஷ சாராயம், 24 மணி நேர டாஸ்மாக் சாராய விற்பனை, சட்ட ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து, தமிழக ஆளுநரிடம் புகார் அளிக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பேரணியாக ஆளுநர் மாளிகை நோக்கி சென்றுள்ளார்.
சுமார் 8000 பேர் இந்த பேரணையில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அதனையும் மீறி சுமார் 20,000 பேர் இந்த பேரணியில் கலந்து கொண்டது தமிழக போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரதான எதிர்க்கட்சி என்பதாலும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்பதாலும் இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இன்று காலை பேரணி தொடங்கிய போது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தலைநகர் சென்னையில் நோக்கி அதிமுக தொண்டர்கள் குவிய தொடங்கினர்.
கிண்டி ஆளுநர் மாளிகையை நோக்கி தொடங்க இருந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்த போது, அவரின் காரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது.
பின்னர் ஒரு வழியாக எடப்பாடி பழனிச்சாமி பேரணியில் கலந்து கொண்டார். பின்னர் ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்து புகார் மனுவை எடப்பாடி பழனிச்சாமி கொடுத்துள்ளார்.