தமிழ் சினிமாவில் 1973 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானார் நடிகர் சரத்பாபு . அதன்பின்னர், தமிழில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் சரத்பாபு அறிமுகமானார். 70,80 களில் முன்னணி நடிகராக வலம் வந்த அவர், நடிகர் கமல், மற்றும் ரஜினி, சிவாஜி, சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரத்பாபு தீவிர சிகிசை பெற்று வந்தார்.
இந்நிலையில் சற்று முன் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.