வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் இரு உள்ளூர் மாம்பழ வகைகளை இணைத்து புது ரகத்தில் மாம்பழம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘மோடி மாம்பழம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த மாம்பழம், மற்றவைகளை விட கூடுதல் சுவையுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் மலிஹாபாத்தைச் சேர்ந்தவர் உபேந்திரா சிங். மாம்பழ ஆராய்ச்சியாளரான இவர், பலவிதமான மாம்பழங்களை ஆய்வு செய்துள்ளார். அந்த வகையில், இரண்டு உள்ளூர் மாம்பழ வகைகளை இணைத்து புதுமையான ரகத்தில் ஒரு மாம்பழத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த மாம்பழத்திற்கு அவர் ‘மோடி மாம்பழம்’ என பெயரிட்டுள்ளார். இதனை கடந்த 2021ல் லக்னோவில் நடைபெற்ற மாம்பழ கண்காட்சியில் காட்சிக்கு வைத்துள்ளதுடன், அப்போதே, தாவர வகைகள் மற்றும் விவசாயிகள் உரிமை ஆணையத்தின் கீழ் பதிவு செய்ய விண்ணப்பித்தார். இதுவரை விற்பனைக்கு வராத இந்த மோடி மாம்பழம், அடுத்தாண்டு முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு மாம்பழமும் சுமார் 450 கிராம் எடை கொண்டதாக இருக்கும் என கூறுகிறார் உபேந்திரா சிங். அவர் மேலும் கூறுகையில், ‘மற்ற மாம்பழங்களைவிட இந்த மோடி மாம்பழம் சற்று கூடுதல் சுவையுடன் இருக்கும். இதுவரை விற்பனைக்கு வரவில்லை; சந்தைக்கு வரும்போது மற்ற மாம்பழங்களைவிட இது பன்மடங்கு அதிக விலையை கொண்டிருக்கும்.
தற்போது மோடி மாம்பழங்களின் 1000 மரக்கன்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. ஒவ்வொன்றும் ரூ.1000 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களிலம் மரக்கன்றுகள் அதிகம் விற்பனை செய்யப்பட்டு இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் விற்பனைக்கு செல்லும்’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement