பழைய ஊதிய முறை வழங்கப்பட வேண்டும், ஒவ்வொரு கிலோமீட்டர் தூரத்துக்கும் 10 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்விகி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் ஸ்விகி உணவு டெலிவரி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உணவு டெலிவரி சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அதாவது, பழைய ஊதிய முறை வழங்கப்பட வேண்டும், ஒவ்வொரு கிலோமீட்டர் தூரத்துக்கும் 10 ரூபாய் வழங்க வேண்டும், ஒவ்வொரு ஆர்டருக்கும் குறைந்தபட்சம் 30 ரூபாய் வழங்கப்பட வ்ணேடும்.
உணவு ரெடியாகும் முன்பே உணவு ரெடி என்ற தகவல் கொடுக்கப்படக் கூடாது. உணவு தீர்ந்து போய்விட்டால், ஆர்டர் கேன்சல் செய்யப்பட வேண்டும். ரிஜெக்ட் பண்ணப்படக் கூடாது.
உணவகங்களில் வாகனம் நிறுத்த வசதி வேண்டும், உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்விகி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ஸ்விகி சேவையில் புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் ஸ்லாட் முறையை திரும்ப பெற்று, ஏற்கனவே வழங்கிவந்த “டர்ன் ஒவர்” தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
newstm.in