திருகோணமலை பகுதியில் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் புல்மோட்டை நிலாவெளி, சம்பல்தீவு மற்றும் ஆனந்தகுளம் ஆகிய பகுதிகளை இணைக்கும் குடிநீர் விநியோகத்திற்கான குடிநீர் குழாய் பொருத்தும் நடவடிக்கை, நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
67.3 மில்லியனுக்கும் அதிகமான நிதி உதவியின் ஊடாக மேற்கொள்ளப்படும் இத்திட்டம் 28 கிலோ மீற்றர் பரப்பைக் கொண்டது.
இந்த திட்டம் நிறைவடைந்தவுடன் 300ற்கும் அதிகமான புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளதுடன், திருகோணமலை நகரம் மற்றும் அதை அண்டியுள்ள கிராம பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்காகவே இத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.