சென்னை : பழம்பெரும் நடிகர் சரத்குமார் உடல்நலக்குறைவு காரணமாக சற்று முன் உயிரிழந்தார். அவரின் மறைவு திரைத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து தனக்கு என தனி ரசிகர்களை வைத்து இருக்கிறார்.
இவருடைய நடிப்பில் வெளிவந்த சிறந்த படங்களை பற்றி பார்க்கலாம்.
இயல்பான நடிகர் : நடிகர் சரத்பாபுவிற்கு ஒரு கதாநாயகனுக்கு உரிய அத்தனை அம்சமும் பக்காவாக பொருந்தி இருந்தது. இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல், வில்லன் குணசித்திர கதாபாத்திரம் என எந்த கேரக்டர் கொடுத்தாலும், அதில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்து ரசிகர்களிடம் கைத்தட்டலை பெற்றுவிடுவார்.
மறக்கமுடியாத படம் : முள்ளும் மலரும் ஜீப்பை ஓட்டிகொண்டு எதார்த்தமாக “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா” என பாடலின் மூலம் அனைவர் மனதிலும் இடம்பிடித்துவிட்டார். இப்படம் ரஜினிகாந்துக்கு எப்படி திருப்புமுனையாக அமைந்ததோ அதே போல சரத் பாபுக்கும் இப்படம் நல்ல படமாக அமைந்தது. சரத்குமாரின் திரைப்படத்தில் இந்த படத்தை என்றுமே மறக்க முடியாது.
நிழல் நிஜமாகிறது : 1978ம் ஆண்டு கே பாலசந்தர் இயக்கிய படம் நிழல் நிஜமாகிறது வெளியானது. இப்படத்தில், கமல், சுமித்ரா, சோபா, சரத்பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இதில் கமலின் நெருங்கிய நண்பராக சரத்பாபு நடித்திருந்தார். இந்த படத்திலும் அமைதியாக எதார்த்தமாக நடித்திருப்பார். இப்படம் சரத் பாப்புக்கு சினிமா கேரியரில் முக்கிய கதாபாத்திரத்தை கொடுத்தது.
உதிரிப்பூக்கள் : தமிழ் சினிமா உலகம் கொண்டாடித் தீர்த்த திரைப்படம் உதிரிப்பூக்கள். இந்த படம் ரிலீசாகி, நூறு நாள் கடந்து ஓடி, அடுத்த படம் வரும் வரைக்கும் பரவலாக பேசப்பட்டது.இந்த படத்தில், இதில் நாயகி அஸ்வினியின் காதலனாக ஓரிரு காட்சியில் நடித்திருப்பார் சரத்பாபு. அந்த படத்திலும் அதே அமைதி, அதே எதார்த்தம்.
அண்ணாமலை : முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை போன்ற படங்களில் ரஜினிகாந்துடன் சேர்ந்து நண்பராக நடித்திருந்தார். இதில் ரஜினி அண்ணாமலை கேரக்டரிலும், சரத் பாபு அசோக் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்கள். நண்பர்களாக இருந்த இவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தவிடுவார்கள். இதில் சரத்பாபுவின் கேரக்டர் பார்க்கும்பொழுது நிஜமாகவே ரஜினியுடன் நெருங்கிய நண்பர் போல் எதார்த்தமான நடிப்பை கொடுத்திருப்பார்.