Samsung Galaxy A14 ட்ரிபிள் கேமரா வசதியுடன் 13,999 ஆயிரத்தில் வெளியானது!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்தியாவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை எதிர்பார்க்கும் மக்களுக்காக புதிய Samsung Galaxy A14 ஸ்மார்ட்போனை
சாம்சங் அறிமுகம்
செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பார்ப்பதற்கு அதன் A34 மற்றும் A54 ஸ்மார்ட்போன்களை போன்றே டிசைன் கொண்டுள்ளது. ஆனால் இதில் 5G வசதி இடம்பெறவில்லை. இதன் விலையை குறைக்க சாம்சங் பலவிதமான வசதிகளை எல்லாம் தவிர்த்துள்ளது. இந்த போன் விவரம் பற்றி காணலாம்.

டிஸ்பிளே வசதிஇதன் டிஸ்பிளே ஒரு வாட்டர் ட்ராப் நோட்ச் ஸ்டைல் டிசைன் கொண்டுள்ளது. மேலும் AMOLED பேனல் வழங்குவதற்கு பதிலாக LCD பேனல் இதில் இடம்பெற்றுள்ளது. இதில் 6.6 இன்ச் முழு HD+ (1080×2408 Pixel) resolution டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது.
டிசைன்இது பார்க்க அதன் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை போன்றே இருந்தாலும் இதன் பின்பக்க பேனல் இந்த போனிற்கும் பிரீமியம் போன்களுக்கும் இருக்கும் வேற்றுமைகளை தெளிவாக காட்டுகிறது. இதன் விலைக்கு ஏற்ப இதன் கட்டமைப்பு தரம் மாறுபடுகிறது. இதில் கைக்கு அடக்கமான ரவுண்டு டிசைன் இருப்பது மட்டுமல்லாமல் கூடுதலாக சைடு மவுண்ட் பிங்கர் பிரிண்ட் வசதி உள்ளது.
கேமரா தரம்இதில் 50MP முக்கிய கேமரா, 2MP மைக்ரோ கேமரா, 5MP அல்ட்ரா வைட் கேமரா என ட்ரிபிள் கேமரா வசதி கொண்டுள்ளது. இதன் முன்பக்கம் செல்பி கேமரா எடுக்க 13MP கேமரா இடம்பெற்றுள்ளது. இதில் முழு HD வீடியோகளை 30fps என்ற அளவில் ரெகார்ட் செய்யமுடியும்.
பேட்டரிஇதில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கே உரித்தான வகையில் மிகப்பெரிய 5000mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது. மேலும் 25W பாஸ்ட் சார்ஜிங் வசதி, USB type-c போர்ட் உடன் வருகிறது. இதன் சார்ஜ்ர் நாம் தனியாக 1,299 ரூபாய் செலுத்தி வாங்கவேண்டும்.
விலை விவரம் (Samsung Galaxy A14 Price)இதில் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடல் 13,999 ஆயிரம் ரூபாய் விலையிலும், 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 14,999 ஆயிரம் ரூபாய் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போன் Black, Light Green, Silver ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த போன் Samsung தளங்களில் விற்பனை செய்யப்படும்.
​செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.