நிறவெறி கோஷங்களால் வெளியேற்றப்பட்ட பிரேசில் வீரருக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆதரவு தெரிவித்துள்ளார்.
வினி ஜூனியரை வார்த்தையால் தாக்கிய ரசிகர்கள்
லா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் மற்றும் வாலென்சியா அணிகள் மோதிய போட்டியில், பிரேசிலின் வினி ஜூனியர் ரசிகர்களால் நிறவெறிக்கு கோஷங்களுக்கு ஆளானார்.
நடுவரிடம் தன்னை நோக்கி நிறவெறி கோக்ஷமிட்ட ரசிகர்ளை வினி ஜூனியர் சுட்டிக் காட்டினார். இதனால் ஆட்டம் 10 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் ஆட்டம் தொடர்ந்த போது கூடுதல் நேரத்தில் சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டு வினி ஜூனியர் வெளியேற்றப்பட்டார். இது அவர் பெற்ற முதல் சிவப்பு அட்டை ஆகும். இந்தப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 0-1 என அதிர்ச்சி தோல்வியடைந்தது.
AP/Alberto Saiz
ரொனால்டோ ஆதரவு
இந்த நிலையில், நிறவெறிக்கு ஆளான வினி ஜூனியருக்கு ஆதரவாக கிறிஸ்டியானோ ரொனால்டோ குரல் கொடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘லா லிகா தொடரில் மீண்டும் இனவெறி பதிவாகியுள்ளது. மீண்டும் வினி ஜூனியர் குறிவைக்கப்பட்டுள்ளார், இது எப்போது வரை?
தண்டனையின்மை மற்றும் இணக்கம் இருக்கும் வரை இனவாதம் இருக்கும்.
நடுவர்கள், கூட்டமைப்பு மற்றும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும், இவ்வளவு அபத்தமான விடயத்திற்கு ரசிகர்கள் கைதட்டுவதும் ஏற்றுக் கொள்ள முடியாதது. போதும். வினி, உனது போராட்டத்தில் என்னை எண்ணிக் கொள், இது நமது போராட்டம்’ என தெரிவித்துள்ளார்.
AP/JOSE JORDAN/AFP