சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற அதிமுகவினர் 5,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆளும் திமுக அரசு மீது புகார் கொடுக்க, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் சைதாப்பேட்டை சின்னமலை அருகே திரண்டனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான பதாகைகளுடன் கலந்து கொண்டனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார். இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மக்கள் பலரும் வெயிலால் மயக்கம் அடைந்தனர். இந்த நிலையில் சென்னையில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற அதிமுகவினர் 5,500 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பாலகங்கா உள்ளிட்ட 5,500 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுக மக்களுக்கு தொல்லை தரும் வகையில் பேரணி நடத்தியதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
newstm.in