இந்தியாவில் ஹோண்டா CBR250RR பைக் அறிமுகம் எப்பொழுது ?

ஹோண்டா இந்தியா நிறுவனம் ஸ்போர்ட்டிவ் ஃபேரிங் ஸ்டைலை பெற்ற CBR250RR பைக் மாடலுக்கான வடிவமைப்பினை காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது. ஆனால் எப்பொழுது அறிமுகம் செய்யப்படும் என உறுதியான தகவலும் இல்லை.

சமீபத்தில் ஸ்கிராம்பளர் ஸ்டைல் பெற்ற ஹோண்டா CL300 பைக்கிற்கான வடிவமைப்பிற்கு காப்புரிமை கோரியிருந்த நிலையில் ஃபேரிங் ஸ்டைல் பெற்ற மாடல் CBR250RR பைக்கில் 249cc  பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கின்றது.

Honda CBR250RR

முழுமையான ஃபேரிங் ஸ்டைலை பெற்ற ஹோண்டா CBR250RR மாடலில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டர்ன் இன்டிகேட்டர் வசதிகளை கொண்டதாக உள்ளது. இந்த பைக்கில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் மெக்கானிசம் மற்றும் மூன்று ரைடிங் மோட் உள்ளன.

CBR250RR 168 கிலோ எடையும், 14.5 லிட்டர் எரிபொருள் டேங்க் கொண்டு மோட்டார்சைக்கிளில் உள்ள சஸ்பென்ஷனை ஷோவா யூஎஸ்டி ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் கொண்டுள்ளது. இதற்கிடையில், இரட்டை சேனல் ஏபிஎஸ் உடன் இரு டிஸ்க்குகளின் பிரேக்கிங் அம்சத்தை பெற்றுள்ளது.

CBR250RR பைக்கில் 249cc  பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 38.2 bhp மற்றும் 23.3 Nm வெளிப்படுத்துகின்றது. டாப் SP வேரியண்டில் 42bhp மற்றும் 25Nm வழங்குகிறது.

இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவிருக்கும் யமஹா R3, கேடிஎம் RC200 மற்றும் ஹீரோ கரிஸ்மா XMR 210 ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது. ஆனால் இந்திய அறிமுகம் குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.