Save Turtles: Today is World Turtle Day | காப்போம் ஆமைகளை: இன்று உலக ஆமைகள் தினம்

ஆமை இனங்களை அழிவிலிருந்து பாதுகாக்க வலியுறுத்தி 2000 முதல் ஆண்டுதோறும் மே 23ல் உலக ஆமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சித்தாமை, அலுங்காமை, பச்சை ஆமை, பெருந்தலை ஆமை உட்பட 300க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இதன் ஆயுட்காலம் 150 – 300 ஆண்டுகள். ஊர்வன இனத்தை சேர்ந்த இவை 50 – 200 முட்டை இடும். கடல் ஆமைகளில் மிகச்சிறியது சித்தாமை. ஆமைகள் மணிக்கு 5.5 கி.மீ., வேகத்தில் செல்வதால் எளிதில் சுறா,
திமிங்கலங்களுக்கு இரையாகின்றன.

கடல் சூழல் துாய்மை காவலர்கள் என அழைக்கப்படும் கடல் ஆமை இனம் அழிந்து வருகிறது ஆமைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவே இத்தினம் கொண்டுவரப்பட்டது. மன்னர் வளைகுடா பகுதியில் அழிந்துவரும் அரியவகை ஆமைகளை பாதுகாக்க, வனத்துறையினருடன் மீனவர்கள், மக்கள் உதவ வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.