இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
குடும்ப உறவில் ஆண்களின் பங்களிப்பை கண்காணிக்க ஸ்பெயின் அரசாங்கம் புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்தியாவில் ஒரு வழக்கம் அதாவது மரபு இருந்து வருகிறது. அதன்படி கணவன் என்றால் வேலைக்குச் செல்ல வேண்டும். அவனுக்கு பணிவிடைகளை மனைவி செய்ய வேண்டும். வேதங்களிலும், மனுதர்மத்திலும் இவையே தான் சொல்லப்பட்டிருகின்றதாக கூறுகின்றனர் அதை கரைத்து குடித்தவர்கள். கணவனுக்கு தொண்டு செய்வதே மனைவியின் கட்டாய பணி நிரல். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, வேலைக்குச் செல்லக்கூடாது, கல்வி பயில கூடாது என்பது இந்திய மரபு.
இந்தநிலையில் உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வேகமாக மாறிக் கொண்டு வருகிறது. இன்றைய டெக்னாலஜி நாளைக்கு எக்ஸ்பயரி ஆகி விடுகிறது. இந்த சூழலில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல்வேறு துறைகளிலும் கோலோச்சி வருகின்றனர். அத்தகைய நிலையில் பெண்களும் ஆண்களுக்கு நிகராக மதிக்கப்பட வேண்டும் என பெண்ணிய குரல்கள் எழுகின்றன.
அப்படி போராடி பெறப்பட்டது தான் பெண்களும் வாக்களிக்கலாம் மற்றும் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்ற உரிமைகள். இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகம் தான் அதை நிறைவேற்றியது என்பது குறிப்பிடதக்கது. இந்தநிலையில் இன்றைய நவீன நாகரிக உலகில் பொருளாதார தேவைகளுக்காக கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இருப்பினும் குடும்பம் மற்றும் அதற்கு தேவையான காரணிகளை செய்வது பெரும்பாலும் பெண்களாகவே இருக்கின்றனர்.
ஆண்கள் தேவை முடிந்ததும் பொறுப்பு துறப்பு செய்வது அவர்களின் இயல்பாகவே உள்ளது. அது விலங்குகள் என்றாலும் சரி மனிதர்கள் என்றாலும் சரி. இனப்பெருக்கம், பொருளீட்டல் ஆகியவை ஆண்களின் கடமையாகவும், குழந்தையை பெற்று வளர்த்து விடுவதும் குடும்பத்தை பேணிக் காப்பதும் பெண்களின் இயல்பாகவே இயற்கை விதிகளை வகுத்துள்ளது.
இந்தநிலையில் குடும்பம் என்ற முறையில் குடும்பத்திற்கு தேவையான சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், துணி துவைத்தல், குழந்தைகளை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளில் ஆண்களின் பங்களிப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை கண்டறிய ஸ்பெயின் அரசாங்கம் ஒரு செல்போன் ஆப்பை அறிமுகப்படுத்த உள்ளது. அந்த செயலியின் மூலம் குடும்ப பங்களிப்பில் ஆண்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை தெளிவாக கணிக்க முடிகிறது.
தண்ணி கொடுத்தது ஒரு குத்தமா? பெண்ணை முரட்டுத்தனமாக தாக்கிய ஆமை!
இது பாலின சமத்துவத்தை கணிக்கிட பயன்படுத்தப்படுவதாக ஸ்பெயின் அரசின் சமத்துவத்துறை செயலாளர் ஏஞ்செல ரோட்ரிகுஷ் தெரிவித்துள்ளார். குடும்பம் அல்லது ஆண் பெண் என்ற உறவு என்று வருகிற போது, ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தான் அதிகளவு மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். எனவே ஆண்களின் பங்களிப்பை கண்காணிக்கவும், உறவுகளில் அவர்களின் செயல்பாடுகளை விவரிக்கவும் இந்த செயலி உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளது.