நீர்கொழும்பு பிரதான நீதவானை அச்சுறுத்தி அதனை காணொளியாக பதிவு செய்து, நீதவானுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டு பெண்கள் மற்றும் ஓர் ஆணுக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீதவான் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் றாகம பிரதேசத்தில் காணப்படும் தனியார் வைத்தியசாலைக்கு சென்றிருந்த போது குறித்த நபர்கள் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
இந்த சம்பவம் தொடர்பில் நீதவான் றாகம பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் பின்னர் சந்தேகநபர்களை கைது செய்து விசாரணைகளை நடத்தியதாகவும் றாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |