சென்னை : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடைசியாக நடித்த படத்தில் சரத்பாபு கதாநாயகனாக நடித்திருந்தார்.
ஹீரோவாக, குணச்சித்ர நடிகராக ஏராளமான படங்களில் நடித்த சரத்பாபு இன்று காலமானார்.
செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உறுப்புகள் செயலிழந்து கவலைக்கிடமாக இருந்த நிலையில் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
நடிகர் சரத்பாபு : தெலுங்கு படங்களில் நடித்து வந்த சரத்பாபுவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் கே.பாலச்சந்தர் இயக்கிய பட்டினத்தில் பிரவேசம் தான். இப்படத்தின் போது தான் பாலச்சந்தர் சத்யம் பாபுவுக்கு சரத் பாபு என பெயர் சூட்டினார். அந்த பெயர் தான் தற்போது வரை சினிமாவில் ஒரு அடையாளத்தை அவருக்கு என்று தனி அடையாளத்தை பெற்று தந்தது.
200க்கும் மேற்பட்ட படங்களில் : திரைப்படங்கள் , சீரியல்கள் என பலவற்றில் நடித்து வந்த சந்திரபாபு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஏறக்குறைய 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கும் சரத்பாபு, கடைசியாக தமிழில் வசந்த முல்லை என்ற படத்தில் நடித்தார்.
ஜெயலதாவுடன் இணைந்து : மேலும், நடிகையும், முன்னாள் முதலமைச்சருமான மறைந்த ஜெயலலிதா கடைசியாக நடித்து வெளிவந்த நதியை தேடிவந்த கடல் என்ற திரைப்படத்தின் சரத்பாபு ஜெயலலிதாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். 1980ம் ஆண்டு ஜனவரி 15ந் தேதி பொங்கல் பண்டிகையொட்டி இந்த திரைப்படம் வெளியானது. ஜெயலலிதா கடைசியாக நடித்த திரைப்படத்தில் சரத்பாபு ஹீரோவாக நடித்திருந்தார். அதேபோல ரஜினிகாந்தோடு இணைந்து, ரஜினியோடு இணைந்து முள்ளும் மலரும், நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து போன்ற படங்களில்
இன்று உயிரிழந்தார் : கடந்த இரண்டு மாதங்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உறுப்புகள் செயலிழந்தன. கடந்த சில நாட்களாக கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் சிகிச்சை பலனின்று இன்று காலை மரணமடைந்தார். அவரது மறைவிற்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.