இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து உடனடியாக அமலுக்கு வரும் வகையில், 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட வேண்டாம் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.இதுதவிர, இன்று முதல் ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவது தொடர்பாக ரிசர்வ் வங்கி சில தகவல்களை தெரிவித்துள்ளது.
- இன்று முதல் முதல் எந்த வங்கியிலும் நீங்கள் ரூபாய் நோட்டுகளை மாற்றலாம் அல்லது டெபாசிட் செய்து கொள்ளலாம்.
- செப்டம்பர் 30, 2023க்குள் எந்த வங்கிக் கிளையிலும் நீங்கள் வைத்திருக்கும் ரூ.2000 நோட்டுகளை மாற்றலாம்.
- ஒரே நேரத்தில் ரூ.20,000 வரை வங்கியில் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
- இந்திய ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளிலும் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம்.
- நீங்கள் மாற்றும் மொத்தத் தொகை ஒரே நேரத்தில் ரூ.20,000-க்கு மேல் இருக்கக்கூடாது.
மேலும் 2,000 ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பாக வங்கிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில், ரூ.2,000 நோட்டு மாற்ற வரும் வாடிக்கையாளர்களுக்கு போதுமான குடிநீர், உரிய இட வசதி உள்ளிட்டவற்றை செய்து தர வேண்டும். தினமும் எவ்வளவு ரூ.2,000 நோட்டுகள் மாற்றப்படுகின்றன என்பது குறித்த தகவல்களை முறையாக சேகரிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.