நடிகர் சரத்பாபு உடல்நல குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
ஐதராபாத்தில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு, ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் அவரது பல உறுப்புகள் செயலிழந்ததால் சரத்பாபு உயிரிழந்ததாக மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று சென்னை தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ் திரையுலகத்தினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து நாளை மாலை சென்னையில் அவருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.