ஜுனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஆர் ஆர் ஆர்’. கடந்த மார்ச் 25 ஆம் தேதி ராஜமெளலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் ரிலிசான இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1,150 கோடி மேல் வசூல் ஈட்டியது.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
வடக்கு அயர்லாந்தின் லிஸ்பர்னில் கடந்த 1964 ஆம் ஆண்டு பிறந்தவர் ரே ஸ்டீவன்சன். இவர் 1990 களில் ஐரோப்பிய தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் டெலி பிலிம்களில் நடித்தார். இதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து திரையுலகில் நுழைந்தார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
தமிழில் ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் சர் ஸ்காட் என்ற ஆங்கிலேயர் கதாபாத்திரத்தில் நடித்தார் ரே ஸ்டீவன்சன். இந்தப்படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த வில்லன் ரோலும், இவரின் நடிப்பும் அமோக வரவேற்பை பெற்றது. மார்வேலின் தோர், வைக்கிங்ஸ் போன்ற வெப் சீரிஸிலும் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.
Sarath Babu: ஈடுகட்ட முடியாத இழப்பு.. நெருங்கிய நண்பரின் மறைவால் கலங்கிப்போன ரஜினி.!
இந்நிலையில் 58 வயதான ரே ஸ்டீவன்சன் நேற்றைய தினம் இத்தாலியில் காலமாகியுள்ளார். இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ‘ஆர் ஆர் ஆர்’ படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் செய்தி. ரே ஸ்டீவன்சன் நிம்மத்தியாக ஓய்வெடுங்கள். எங்கள் இதயங்களில் என்றென்றும் ‘சர் ஸ்காட்’ ஆக இருப்பீர்கள் என பதிவிட்டுள்ளனர்.
Vikram: பிரபல இயக்குனரின் பரபரப்பு குற்றச்சாட்டு: உண்மையை போட்டுடைத்த விக்ரம்.!
இதனையடுத்து இயக்குனர் ராஜ மெளலி தனது ட்விட்டர் பக்கத்தில் ரே ஸ்டீவன்சன் மறைவு தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில், அதிர்ச்சி. இந்த செய்தியை நம்பவே முடியவில்லை. அவருடன் பணிபுரிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.