தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் பயணம் மேற்கொள்கிறார். தொழில் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் செல்வது கவனிக்கத்தக்கது.அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாய மொழி பாடமாக இருக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தகுதியான ஆசிரியர்களால் தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.பால் கொள்முதல் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் சம்பளத்தை அவரவர் வங்கி கணக்குகள் வழங்க அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாற்றுத் திறனாளிகள் நல மேலாண் இயக்குநராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.கூட்டுறவு சங்க பதிவாளராக டாக்டர் சுப்பையன் நியமனம் செய்யப்பட்டார். நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரனுக்கு கூடுதலாக தொல்லியல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
எடப்பாடி கூட்டணியில் சீமான்? – மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் நேர்காணல்!
சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடிக்கு சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்.சென்னைக்கு உடல் கொண்டு வரப்பட்டு, இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த கருமுத்து கண்ணன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 70.சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதையொட்டி நேற்று இரவு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகரில் நடந்த மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பும் வழியில் மதுரை ரயில் நிலையத்தில் மாணவி அபிநந்தன மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு வயது 15. போட்டியின் போது காய்ச்சல் இருந்ததாக தெரிகிறது. உரிய சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை.கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாதம் திறக்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், கடைசி கட்டப் பணிகள் காரணமாக ஜூலை மாதம் நிச்சயம் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.காது, மூக்கு, தொண்டை மருத்துவத்தில் கத்தியின்றி ரத்தமின்றி நவீன அறுவை சிகிச்சை செய்து சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இந்தியா
ரயில் சேவைகளை பெற 2000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உலகம்
ஆமைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக ஆமைகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.ராஜமௌலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வில்லன் நடிகர் ரே ஸ்டீவன்சன் உடல்நலக் குறைவால் காலமானார்.
விளையாட்டு
டாடா ஐபிஎல் 2023 தொடரில் குவாலிஃபயர் 1ல் சென்னை, குஜராத் அணிகள் இன்று மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழையும்.