"இதயத்தை இடம்மாற்றிப்போடும் செய்தி" – கருமுத்து கண்ணன் மறைவிற்கு வைரமுத்து இரங்கல்..!

கருமுத்து தி. கண்ணன், கருமுத்து தியாகராஜர் – இராதா தம்பதியரின் ஒரே மகன். இவர் மதுரை தியாகராசர் கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி மற்றும் தியாகராசர் மேலாண்மைக் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் நிர்வாகியாகவும் செயல்பட்டுள்ளார். பல நூற்பாலைகளின் தலைவராகவும் உள்ளார். மேலும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தக்கார் ஆகவும் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார்.

கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் சித்திரை திருவிழாவில் கூட இவர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த கருமுத்து கண்ணனின் உடல் மதுரை கோச்சடையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள முக்கிய பிரமுகர்களும் , பொதுமக்களும் இன்று காலை முதல் அவருக்கு அவரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கருமுத்து கண்ணனின் உடல் நாளை மதியம் நல்லடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. 18 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்காராக இருந்து வந்த கருமுத்து கண்ணனுக்கு தமிழ்நாடு அரசு 2015 ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் விருதை வழங்கி கௌரவித்தது. நடுவன் அரசு ஜவுளி குழு தலைவர் பதவியையும் இவர் வகித்துள்ளார்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், 

இதயத்தை

இடம்மாற்றிப்போடும் செய்தி

மதுரையில் என் நண்பர்

கருமுத்து கண்ணன்

காலமாகிவிட்டார்

ஒரு கல்வித் தந்தை

ஒரு தொழிலரசர்

ஒரு சமூக அக்கறையாளர்

மீனாட்சியம்மன் கோயில் தக்கார் என்று மரணம் ஒரே கல்லில்

பல கனிகளை அடித்துவிட்டதே!

அனைவர்க்கும்

என் ஆழ்ந்த ஆறுதல்

எனக்கு யார் சொல்வது?என்று ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

  


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.