புதுடெல்லி: வங்கிகளில் 2000 ரூபாய் தாள்களை மாற்ற ரிசர்வ் வங்கியால் பிரத்யேக சலான் வெளியிடப்பட்டுள்ளது. வங்கிகளில் இன்று முதல் 2,000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து மாற்றிக்கொள்ள முடியும். வழக்கமான வங்கிப் பணிகளைப் பாதிக்காத வகையில் ஒருவர், நாள் ஒன்றுக்கு 10 நோட்டுக்களை மட்டுமே மாற்றமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதனை மாற்றுவதற்கு ஏதுவாக 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. […]