இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த கலவரம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது. அப்போது முதலமைச்சர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் கலவரம் நடந்த போது ஆளுங்கட்சியின் பங்களிப்பு தொடர்பான விவரங்களை சேகரித்து சமீபத்தில் India: The Modi Question என்ற பெயரில் இரண்டு பாகங்களாக ஆவணப் படத்தை பிபிசி தயாரித்து சமீபத்தில் வெளியிட்டது.
பிபிசியின் குஜராத் கலவர ஆவணப் படம்
இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் இடம்பெற்றிருப்பதாக சர்ச்சை கிளம்பியது. இந்த சூழலில் பிபிசியின் ஆவணப் படத்தை பொது இடங்களில் திரையிடவும், சமூக வலைதளங்களில் பகிரவும் மத்திய அரசு தடை விதித்தது. இதை மீறி திரையிட்டவர்கள் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
மோடி காலில் விழுந்த பிரதமர்… பப்பு நியூ கினியாவில் எதிர்பாராத நெகிழ்ச்சி… யார் இந்த ஜேம்ஸ் மராப்?
ஆஸ்திரேலியாவில் திரையிடல்
ஆனால் வெளிநாடுகளில் அப்படியான நடவடிக்கைகள் எடுக்க முடியவில்லை. இந்நிலையில் தான் ஆஸ்திரேலிய நாட்டின் தலைநகர் கேன்பெர்ராவில் உள்ள அந்நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பிபிசி ஆவணப் படம் திரையிடப்படுகிறது. தனியார் அமைப்புகள் நாடாளுமன்ற அறையை வாடகைக்கு எடுத்து திரையிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி சுற்றுப்பயணம்
அதுவும் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியாவிற்கு பிரதமர் மோடி சென்றிருக்கும் சூழலில் ஆவணப் படத்தை திரையிடுகின்றனர். இவர் சிட்னி நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். நாளைய தினம் (மே 24) பிபிசி ஆவணப் படம் கேன்பெர்ராவில் திரையிடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அம்னஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள், இந்து – இஸ்லாமிய அமைப்புகள்,
சஞ்சீவ் பட்டின் மகள் பங்கேற்பு
ஆஸ்திரேலியாவில் உள்ள பெரியார் – அம்பேத்கர் சிந்தனையாளர்கள் வட்டம், கலாச்சார ஆராய்ச்சி அமைப்பினர் உள்ளிட்டோர் செய்துள்ளனர். இதில் பேச்சாளர்களாக ஆகாசி பட் கலந்து கொள்கிறார். இவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் மகள். முன்னதாக பிரதமர் மோடி உள்ளிட்டோர் குஜராத் கலவர வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர்.
சீனா: காமெடி பண்ணதற்கு Fine போட்ட அதிகாரிகள்.. எவ்வளவு அபராதம்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.!
ஜனநாயக நடவடிக்கை
இதை எதிர்த்து ஸ்கியா ஜாஃப்ரி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இவருக்கு பின்னால் இருந்து செயல்பட்டவர்கள் டீஸ்டா செடால்வத், சஞ்சீவ் பட் உள்ளிட்டோர் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சஞ்சீவ் பட்டின் மகள் தான் திரையிடல் நிகழ்வில் உரையாற்றுகிறார். இதுதவிர அந்நாட்டு எம்.பி.,க்கள் இருவரும் திரையிடல் நிகழ்ச்சியில் பேசுகின்றனர். இது அந்நாட்டில் நிலவும் ஜனநாயக ரீதியிலான போக்கை உணர்த்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த சில நாட்களாக ஜி7 உச்சி மாநாடு, பப்பு நியூ கினியா சுற்றுப்பயணம் ஆகியவற்றில் பிரதமர் மோடி குறித்த விஷயங்களை பாஜகவினர் கொண்டாடி தீர்த்தனர். இந்த சூழலில் தான் ஆஸ்திரேலிய பயணத்தின் போது பிபிசி ஆவணப் படத்தை திரையிட்டு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர்.