சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். வரும் 30-ம் தேதி முதல் இந்த போன் விற்பனை செய்யப்பட உள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் அந்நிறுவனத்தின் மோட்டோ எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.55 இன்ச் P-OLED முழு ஹெச்.டி+ டிஸ்ப்ளே
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- மீடியாடெக் டிமான்சிட்டி 8020 ப்ராசஸர்
- 50 + 13 மெகாபிக்சல் கொண்ட பின்பக்க கேமரா
- 32 மெகாபிக்சல் கொண்டுள்ள செல்ஃபி கேமரா
- 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ்
- 4,400mAh பேட்டரி
- 68 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
- இரண்டு நேனோ ஸ்லிம் ஸ்லாட்
- டைப் சி யுஎஸ்பி 2.0 போர்ட்
- 5ஜி நெட்வொர்க்
- சார்ஜர் இந்த போனின் பாக்ஸில் இடம் பெற்றுள்ளது
- இதன் விலை ரூ.29,999
Unveiling the #motorolaedge40: World’s Most Flamboyant Performer! World’s Slimmest 5G phone with IP68 rating, World’s 1st MTK Dim 8020,144Hz curved display & more at ₹29,999 starting 30 May on Flipkart, https://t.co/azcEfy2uaW & at leading retail stores or Pre-Order on @flipkart
— Motorola India (@motorolaindia) May 23, 2023