Rajinikanth: ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் சம்பளம் எத்தனை கோடினு தெரியணுமா?

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Kamal Haasan: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், அஜித், விஜய் உள்ளிட்டோரின் சம்பள விபரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

​விஜய்​Thalapathy 68: தளபதி 68 பற்றி விஜய் அப்படி சொல்லவே இல்லை: அவர் அப்படிபட்ட ஆளும் இல்லைகோலிவுட் நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குபவர் தளபதி விஜய் தான். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் தளபதி 68 படத்திற்காக விஜய்க்கு ரூ. 200 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் சம்பள பட்டியலில் முதலிடத்தை பிடித்துவிட்டார். தளபதி 68 படத்திற்கு முன்பு படம் ஒன்றுக்கு ரூ. 125 கோடி வாங்கி வந்தார் விஜய். அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
விஜய் ஆண்டனி​ஹோட்டலில் உணவு பரிமாறிய விஜய் ஆண்டனி!​
​ரஜினி​விஜய்யை அடுத்து அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 120 கோடி வாங்குகிறாராம். 70 வயதை தாண்டியபோதிலும் வாலிபர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார் ரஜினி. அவர் தலைவர் 171 படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடுவதாக தகவல் வெளியானது. ஆனால் ஓய்வு பற்றி தற்போதைக்கு அவர் நினைக்கவில்லையாம்.

​Rajinikanth: தலைவர் 171 படத்துடன் ரிடையர் ஆகிறாரா ரஜினி?: குட் நியூஸ் இதோ

​அஜித்​விஜய், ரஜினிகாந்த் ஆகியோரை அடுத்து அதிக சம்பளம் வாங்கும் கோலிவுட் நடிகர் அஜித் குமார். அவர் படம் ஒன்றுக்கு ரூ. 105 கோடி வாங்குகிறாராம். அவர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த பட வேலையை முடித்துக் கொண்டு தன் ஸ்போர்ட்ஸ் பைக்கில் உலக டூர் கிளம்பவிருக்கிறார். அதனால் நவம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடிக்கப் போகிறார் மகிழ்திருமேனி.

​Ajith: பைக்கில் உலகம் சுற்றணுமா?: கவலைய விடுங்க, நம்ம அஜித்தின் AKMotoRide இருக்கே​
​கமல் ஹாசன்​அரசியலில் கவனம் செலுத்தி வந்த உலக நாயகன் கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் கெத்தாக நடித்தார். அந்த படம் ரூ. 500 கோடி வசூல் செய்தது. இதையடுத்து தன் சம்பளத்தை உயர்த்திவிட்டார் ஆண்டவர். அவர் தற்போது படம் ஒன்றுக்கு ரூ. 75 கோடி வாங்குகிறார். படங்கள் தவிர்த்து பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கமல் ஹாசன்.

​Kamal Haasan:யாரும் எதிர்பாராத ஆளுடன் கூட்டணி சேர்ந்த கமல்: இவர் லிஸ்டலயே இல்லயே ஆண்டவரே​
​தனுஷ்​நடிப்பு ராட்சசனான தனுஷ் படம் ஒன்றுக்கு ரூ. 20 கோடி முதல் ரூ. 35 கோடி வரை வாங்குகிறாராம். கோலிவுட்டில் ஆரம்பித்து பாலிவுட், ஹாலிவுட் வரை சென்றுவிட்டார். உலக சினிமா ரசிகர்களை தன் நடிப்பால் மிரட்டிவிட்டார். ஹாலிவுட்டை அடுத்து டோலிவுட்டிலும் அறிமுகமாகிவிட்டார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான சார் தெலுங்கு படம் அக்கட தேசத்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்கு வருகிறார் தனுஷ்.

​Kamal Haasan:யாரும் எதிர்பாராத ஆளுடன் கூட்டணி சேர்ந்த கமல்: இவர் லிஸ்டலயே இல்லயே ஆண்டவரே​
​சிவகார்த்திகேயன்​சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கிறார் சிவகார்த்திகேயன். பெரியவர்கள் முதல் குட்டீஸ் வரை கவர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன் படம் ஒன்றுக்கு ரூ. 20 கோடி முதல் ரூ. 30 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.
​சூர்யா​சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சூர்யா ஒரு படத்தில் நடிக்க ரூ. 20 கோடி முதல் ரூ. 25 கோடி வரை வாங்குகிறார். அவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே மனைவி ஜோதிகா, பிள்ளைகளுடன் மும்பையில் செட்டில் ஆகியிருக்கிறார் சூர்யா.

​Jyothika: மும்பையில் செட்டிலான கையோடு ஜோதிகாவுக்கு அடித்த ஜாக்பாட்: இது ஆரம்பம் தான்

​விக்ரம்​ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அந்த கதாபாத்திரமாகவே வாழ்வதற்கு பெயர் போனவர் சீயான் விக்ரம். அவர் படம் ஒன்றுக்கு சுமார் ரூ. 25 கோடி வரை வாங்குகிறாராம். இந்நிலையில் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 170 படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடிக்க சீயானுக்கு ரூ. 50 கோடி கொடுக்க லைகா முன்வந்திருப்பதாக தகவல் வெளியானது.

​Rajinikanth: தலைவர் 170ல் ரஜினிக்கு வில்லனாக விக்ரமுக்கு லைஃப்டைம் செட்டில்மென்ட் கொடுத்த லைகா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.