ரோம் நகர ட்ரேவி நீரூற்றில் 300000 லிட்டர் தண்ணீரை மாற்றும் காரணம் இது தான்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

“தென்னைமரத்துல தேள் கொட்டினா பனைமரத்துல நெறி கட்டிச்சாம்” அப்பிடின்னு நம்ப ஊருல ஒரு பழமொழி சொல்லுவாங்க.

அதுக்கு ஏற்றார் போலவே இருந்தது இங்கே இத்தாலியின் தலைநகரில் நேற்று நிகழ்ந்த அந்த நிகழ்வு.

அப்படி என்ன என்று புருவங்களை உயர்த்தும் அன்பர்களே, மேலே படியுங்கள்.

கடந்த சில வாரங்களாக இத்தாலியில் உள்ள எமிலியா ரோமானிய (Emilia Romagna) என்ற இடத்தில பலத்த மழை. அடங்கா மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக ஊருக்குள்ள பெரும் வெள்ளம்.

Emilia Romagn

இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 தொட்டுள்ளது. வீடு, வாகனம், உடைமைகள் என்று அனைத்தையும் இழந்து தவித்த 30,000-கும் மேலான மக்கள் இங்கே இருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற பட்டுள்ளார்கள்.

இத்தாலி அரசாங்கமும் தன்னால் இயன்ற அளவு அந்த மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். வெள்ளத்தில் தன்னுடைய அனைத்தையுமே தொலைத்துவிட்டு கண்ணீர் மல்க பேசும் அம்மக்களை காணும் போது நெஞ்சு வெடிக்குது.

இப்படி ஒருபக்கம் இருக்கும் பொழுது இதை காரணம் காட்டி மே 21 அன்று திடீரென்று 10 இயற்கை ஆர்வலர்கள் ரோம் நகரின் மிகவும் பிரசித்தி பெற்ற நீரூற்றான ட்ரேவி பவுண்டேன் (Trevi fountain) உள்ளே இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கிறோம் என்று கூறி அதில் கரியை கரைத்து விட்டு விட்டார்கள்.

Trevi fountain

இத்தாலியில் சுற்றுலா தளங்களின் அரசன் என்று கூறும் அளவிற்கு இந்த நீரூற்று அவ்வளவு பெருமையும் பிரசித்தியும் பெற்றதாகும். 1762ம் வருடம் நிறுவப்பட்ட இந்த நீரூற்ரை, 250 வருடங்கள் பழைய வரலாற்றை கொண்ட இந்த சின்னத்தை இப்படி சேதப்படுத்தி விட்டனர்.

இவை அனைத்தும் சுற்றுலா பயணிகள் வெள்ளம் போன்று சூழ்ந்திருக்கும் பொழுதே கணப்பொழுதில் அரங்கேறியுள்ளது. அந்த நீர்வீழ்ச்சியை ரசித்து கொண்டிருந்த மக்கள் என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்தது.

போலீஸ் வந்து அவர்களை அப்புறப்படுத்துறதுக்குள்ளே அந்த நீரூற்றில் இருந்த நீரை கருமையாக மாற்றி விட்டனர் போராளிகள். 20 நிமிடங்களில் போலீஸ் அங்கே வந்து இவர்களை அப்புறப்படுத்தினாலும், அதற்குள் இந்த நீரூற்று சேதமடைந்து விட்டது.

சரி, இவர்கள் யார்? ஏன் இவ்வாறு செய்தார்கள்? யாரை எதிர்த்து இந்த போராட்டம்? எதற்காக இந்த போராட்டம்?

Trevi fountain

வேற ஒன்னும் இல்லேங்க, எமிலியா ரோமானியா நகரத்துல வந்த சமீபத்திய வெள்ளம் ஓர் இயற்கை சீற்றம் என்றும் சுற்றுப்புற சூழல் பாதிப்படைந்த காரணத்தால் தான் இவ்வாறு நிகழ்ந்தது என்பது இவர்கள் கூற்று.

இந்த இத்தாலிய அரசாங்கம் சுற்றுப்புற சுழலுக்கு ஏற்றாற்போல எந்த ஒரு முன்னேற்றமும் செய்வதில்லை என்று தான் இந்த போராட்டம். இந்த அரசாங்கம் படிம எரிபொருள்களுக்கு (fossil fuel) செலவு செய்வதை அறவே நிறுத்த வேண்டும் என்பதே இவர்கள் கோரிக்கை.

ஒரு பக்கம் வெள்ளத்தின் காரணமாக தங்கள் வீடு வாசல் தொலைத்து தவிக்கின்ற மக்களுக்கு உணவும், அடைக்கலமும் ஏற்பாடு செய்து தர பல லட்சங்களை செலவு செய்து கொண்டிருக்கும் பொழுது, இவர்கள் இப்படி வந்து ஒரு வரலாற்று பெருமை மிகுந்த, அதுவும் உலகம் முழுதும் பிரசித்திபெற்ற ஒரு சின்னத்தை இப்படி நாசமாக்கியது இந்த அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

Emilia Romagn

ஏனெனில், இந்த நீரூற்று கிட்டத்தட்ட 300,000 லிட்டர் தண்ணீர் கொண்டது. இப்படி இவர்கள் செய்த காரணத்தால் இதிலேயுள்ள அனைத்து நீரையும் வெளியேற்றி, நீரூற்றை முழுவதுமாக சுத்தம் செய்து, மீண்டும் அதில் நீரை நிரப்ப பெரும் பொருள்செலவு ஆகும்.

மேலும், தினம் 3000 யூரோ அளவிற்கு காசுகளை மக்கள் இந்த நீரூற்றில் வீசுகிறார்கள். இதன் மூலமாக மட்டுமே வருடத்திற்கு சுமார் 1 மில்லியன் யூரோ மேல் வருமானம் பெற்று தரும் இதை சீரமைப்பதற்காக மூடுவதன் மூலமாக ரோம் நகரத்திற்கு கணிசமான இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.

அது மட்டுமின்றி, வேறு எந்த பாதிப்பும் அந்த நீரூற்றில் ஏற்படாவண்ணம் ஆவண செய்ய வேண்டும். இது போன்ற போராட்டங்கள் மற்ற சுற்றுலா தளங்களையும் பாதிக்காவண்ணம் அதற்குண்டான ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்று தவித்து கொண்டிருக்கிறார்கள் அரசாங்க அதிகாரிகள்.

இறுதி தலைமுறை (Last Generation) என்ற பெயரில் இயங்கி கொண்டிருக்கும் இந்த இயற்கை ஆர்வலர்கள் இத்தாலிய மக்களுக்கு பரிச்சியமானவர்கள் தான். இதற்கு முன்பும் ஒரு முறை மிலன் நகரத்திலுள்ள ல ஸ்காலா (La Scala) என்ற ஒரு உலக பிரசித்திபெற்ற ஒரு அரங்கத்தில் இப்படி தான் பெயிண்ட் பூசி விட்டார்கள். இது போன்று அழிவுகரமான போராட்டங்கள் செய்வதில் இவர்கள் பேர் போனவர்கள்.

Trevi fountain

இயற்கையை பாதுகாக்கவும், சுற்றுசூழலின் மேன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் அரசாங்கத்திற்கு எதிராக போராடலாம். தவறில்லை. ஆனால் அந்த போராட்டத்தில் மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க சின்னங்களையும் கட்டிடங்களையும் சேதப்படுத்துவதில் என்ன நியாயம் என்று முகம் சுளிக்கிறார்கள் மக்களும்.

இதுபோன்ற சிலரின் செயல்களால் அனைத்து சுற்றுசூழல் ஆர்வலர்களுக்கும் அவப்பெயர் வரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இவர்கள் இப்படி செய்வது சரியா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மக்களே, உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.