கேரளாவிற்கு வந்த இந்திய துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், நேற்று முன்தினம் (மே 21) திருவனந்தபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
பின்னர் புகழ்பெற்ற பத்மநாபசாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து, நேற்று (மே 22) கண்ணூருக்கு வந்த துணைக் குடியரசுத் தலைவர், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தனது கணித ஆசிரியராக இருந்த ரத்னா நாயர் என்பவரின் வீட்டிற்கு சென்று அவரது காலைத் தொட்டு வணங்கி ஆசிப் பெற்றார்.
சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக ஆசிரியர் வீட்டில் இருந்து அவருடன் உரையாடினார். பின்னர், தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு துணைக் குடியரசுத் தலைவர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
கடந்த 1968- ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார் ரத்னா நாயர்.
56 ஆண்டுகளுக்கு பிறகு தனது மாணவரைச் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது; என் மாணவர் பெரும் பொறுப்பில் உள்ளதில் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் ஆசிரியர் ரத்னா நாயர்.