மறைந்த நடிகர் சரத்பாபுவை பாதித்த செப்சிஸ் எனும் நோய் குறித்து மருத்துவர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல நடிகர்
செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் சரத்பாபு உயிரிழந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியது. அவரை பாதித்த இந்த நோயினால் உடலின் பாகங்கள் செயலிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மருத்துவர் ஒருவர் செப்சிஸ் நோய் குறித்தும், அதன் தீவிரம் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.
செப்சிஸ் நோய்
செப்சிஸ் என்பது ஓர் உறுப்பு பாதிப்படைந்து மற்ற உறுப்புகளையும் பாதிப்பது மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
செப்சிஸ் உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படக் கூடிய, கடுமையான ஒரு நிலை.
உடலில் ஏற்படும் தொற்றின் தீவிர நிலை தான் இந்த செப்சிஸ் என அவர் கூறியுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக மருத்துவர் கூறுகையில், ‘பொதுவாக மனித உடலில் ஏதேனும் ஒரு தொற்று ஏற்பட்டால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தொற்றை அழித்துவிடும்.
பொதுவாக தொற்று என்பது பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை என எதன் மூலமாக வேண்டுமானாலும் ஏற்படலாம். உடலில் ஏற்படக்கூடிய தொற்றின் வீரியம் குறைவாக இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதை அழித்துவிடும்’ என தெரிவித்துள்ளார்.
எப்படி குணப்படுத்துவது?
முறையான உணவு, தேவையான அளவு தண்ணீர் குடித்தால் இந்தத் தொற்று தானாகவே அழிந்துவிடும்.
மேலும் செரிமானத்தின்போது குடலில் இருக்கக்கூடிய நல்ல பாக்டீரியா, அசிடிட்டி போன்றவை இந்தத் தொற்றின் வீரியத்தைக் குறைத்து, ரத்தத்தில் தொற்று கலக்காமல் தடுத்து அழித்துவிடும்.
ஒருவேளை இந்தத் தொற்றானது ரத்தத்தில் கலந்தாலும், உடலில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி, இந்தத் தொற்றின் வீரியத்தைக் குறைத்து தொற்றை அழித்துவிடும்.
Getty Images
அறிகுறிகள்
உடலில் எந்த உறுப்பில் தொற்று ஏற்பட்டிருக்கிறதோ அதன் பொருட்டு அறிகுறிகள் மாறுபடும்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அந்தத் தொற்றினை எதுவுமே செய்ய முடியாதபோது, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
ஒருவேளை ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்கப்பட்டாலும், உடலில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியால் தொற்றின் வீரியத்தையோ, தொற்றையோ அழிக்க முடியாமல் போய் ஆன்டிபயாட்டிக், ஆன்டிவைரல் மாத்திரைகளாலும் அழிக்க முடியாத நிலையில் இந்தத் தொற்று உடல் உறுப்புகளை பாதிப்படையச் செய்யும்.
பாதிப்பு
சிறுநீர் பாதையில் கடுமையான தொற்று ஒருவேளை ஏற்பட்டால், அது இரண்டு சிறுநீரகங்களையும் பாதிக்கும். மேலும், இதயத்தில் பாதிப்பை உண்டாக்கும். இதனால் ரத்த அழுத்தம் குறைவதற்கும் வாய்ப்புள்ளது.
இதற்கும் அடுத்த கட்டமாக நுரையீரலை பாதிக்கும். இது Acute Respiratory Distress Syndrome என்று அழைக்கப்படுகிறது.
இந்த கடுமையான தொற்று ஏற்படும்போது, பல உறுப்புகள் பாதிக்கப்படும். அப்போது நோயாளி நினைவை இழக்கும் வாய்ப்பு உள்ளது.
FACEBOOK.COM/ ALEXANDRA RUDDY
யாருக்கு இந்த தொற்று ஏற்படலாம்?
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகள் மருத்துவர்களால் கொடுக்கப்படும்.
இதனால் தற்காலிகமாக நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது தொற்று ஏற்படக்கூடும்.
70, 80 வயதானவர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்பதால், அவர்களுக்கு இந்த தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், இவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாக உள்ளது.
Designua | Shutterstock
சிகிச்சை முறைகள்
செப்சிஸ் ஏற்படும்போது ஏராளமான துணை மருந்துகளும், பிற சிகிச்சை முறைகளும் தேவைப்படும்.
ஒரு தொற்று ஏற்பட்ட தொடக்க காலத்திலேயே அதற்குரிய சிகிச்சையை அளித்தால், அதனை சுலபமாக அழித்து விடலாம்.
ஆனால், அந்தத் தொற்று இரத்தத்தில் கலந்து உடலில் உள்ள உறுப்புகளையும் பாதித்து, தொற்றின் வீரியம் அதிகரிக்கும்போது தொற்றை எந்த மருந்துகளாலும் அழிக்க முடியாது.
இதனால் ஒருவருக்கு செப்சிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
எனவே சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், முறையான உணவுப் பழக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும்.