சென்னை: Vidaamuyarchi (விடாமுயற்சி) விடாமுயற்சி படத்திலிருந்து வெளியேறும் யோசனையில் அஜித் இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் கடைசியாக நடித்த துணிவு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற அப்படம் வசூல் ரீதியாகவும் 300 கோடி ரூபாயை வசூலித்து பொங்கல் ரியல் வின்னராக மாறியது. இதற்கிடையே துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தனது 62ஆவது படத்தில் நடிப்பதற்கு லைகா தயாரிப்பில் கமிட்டானார் அஜித். முதலில் விக்னேஷ் சிவன் அந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது.
விக்னேஷ் சிவன் அவுட்: ஏகே 62 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த அந்தப் படத்துக்கான கதையை லைகாவிடம் சொன்னார் விக்னேஷ் சிவன். கதையின் முதல் பாதி தயாரிப்பு நிறுவனத்துக்கு பிடித்துப்போக இரண்டாம் பாதியில் சில மாற்றங்களை செய்ய சொல்லியிருக்கிறது லைகா. ஆனால் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாத விக்னேஷ் சிவன் ஏகே 62விலிருந்து யோசிக்காமல் வெளியேறினார். இதனையடுத்து அஜித் 62ஐ யார் இயக்குவார் என்று கேள்வி எழுந்தது.
மகிழ்திருமேனி இன்: அதனையடுத்து தடம், தடையறத்தாக்க, கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த மகிழ் திருமேனி படத்தை இயக்குவதற்கு கமிட்டானார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி வெளியானது. படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் சுமாராக இருந்தாலும் படம் சூப்பராக இருக்கும் என ஏகே ரசிகர்கள் ரொம்பவே நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
எப்போது ஷூட்டிங்: படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் இதுவரை வெளியாகாமல் இருக்கிறது. கதாநாயகியாக த்ரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக மட்டும் கூறப்படுகிறது. ஆனால் ஷூட்டிங் எப்போது என்பதற்கு பதில் இல்லை. நேற்றே ஷூட்டிங் ஆரம்பித்திருக்க வேண்டுமென கூறப்பட்ட சூழலில் இப்போது ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திற்கு படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போயிருக்கிறதாம்.
வெளியேறுகிறாரா அஜித்?: இந்நிலையில் கோலிவுட்டில் ஒரு புதிய தகவல் வெளியாகி பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது விடாமுயற்சி படத்திலிருந்து அஜித் வெளியேறப்போகிறார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் லைகா நிறுவனத்திற்கு தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனை நடவடிக்கை அஜித்தை ரொம்பவே அப்செட்டாக்கிவிட்டது. அதனால் இந்த யோசனையில் அவர் இருக்கிறார் என பேச்சு எழுந்திருக்கிறது.
இது உண்மையில்லை வதந்தி என்பது உறுதி: ஆனால் இப்படிப்பட்ட ஒரு பேச்சு வேண்டுமென்றே யாரோ கிளப்பிவிட்ட வதந்திதான். அஜித் விடாமுயற்சியில் நடிப்பதற்கு ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார். ஹீரோயின் ஃபிக்ஸ் ஆனதும் படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிடும். ஷூட்டிங் தொடங்கியதை அடுத்து இந்த பேச்சு எவ்வளவு பெரிய வதந்தி என்று உறுதியாகும் என அஜித் ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர்.